districts

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு குறைதீர் முகாம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 5 -

     தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கரு ணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத் தில் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது செவ்வாய்க்கிழமை, சமூக  நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச் சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு  குறைதீர் முகாம் நடத்தப்படும்.

   முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளிகள் இ-சேவை  மையம் மூலமாக விண்ணப்பித்த ஒப்புகை ரசீதுடன் கூடிய  இணையவழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்திய டைந்தும் முதிர்வுத்தொகை கிடைக்கப் பெறாமல் உள்ள பய னாளிகள் வைப்புத்தொகை பத்திர நகல், பத்தாம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு புத்தக நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) வண்ணப் புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.