மயிலாடுதுறை, டிச.4 - மயிலாடுதுறை மேம்பால சாலை களின் இருபுறங்களிலும் நகராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை தொ டர்ந்து கொட்டி வருவதால் மலை போல் குவிந்துக் கிடக்கும் குப்பைக ளிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசி பொதுமக்களை வாட்டிவதைக் கிறது. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் தலை மையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேம்பால சாலைகளின் இருபக்க மும் நகராட்சி ஊழியர்களால் சேக ரிக்கப்படும் குப்பைகள் கொட்டப் பட்டு வந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட தனியார் ஹோட்டல்களின் கழிவுகளும், கோழி இறைச்சி கழிவு களும் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. வீசிக் கொண்டே இருக் கும் துர்நாற்றத்தினால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகி வரு கின்றனர்.
மூச்சுத்திணறல் போன்ற நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய கோரிக்கைகள் அடங்கிய புகார் மனுவினை நகராட்சி ஆணைய ரிடம் வழங்கிய நிலையில் 3 நாட்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் மாப்படுகை ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடப்பதையறிந்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஆணை யர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதி காரிகள் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதாகவும், அந்த இடத்தில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்து குப்பை கொட்டுப வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாகவும், சக்தி மிகுந்த மின் விளக்கு கள் அமைப்பதாகவும், எச்சரிக்கை விளம்பர பலகை வைப்பது உள்ளிட்ட உத்திரவாதங்களை எழுத்துப்பூர்வ மாக ஏற்றுக் கொண்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.ஜி. ரவி, நகர செயலாளர் துரைக்கண்ணு, சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். ரவீந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு குபேந்திரன், பேராசிரியர் முரளி, இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், பெரியார் திராவிடர் கழக சுப்பு.மகேசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.