districts

img

கோரிக்கைகள் நிறைவேறும் வரை உறுதிமிக்க போராட்டங்களை நடத்துங்கள்!

மயிலாடுதுறை, மே 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமையில் மக்களை அணிதிரட்டி  விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் உரிமைகளுக்காகவும், கூலி பிரச்சனைகளுக்காகவும் பல்வேறு  வீரஞ்செறிந்த மக்கள் போராட்டங்களை யும் நடத்தியவர் மறைந்த தோழர் சம்பா எம்.ராமசாமி. இவரது நினைவு இல்லத்தை கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன்  குத்தா லம் ஒன்றியம், காஞ்சிவாய் கிராமத்தில் ஞாயிறன்று திறந்து வைத்தார். கட்சியின் குத்தாலம் ஒன்றியச் செய லாளர் சி.விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், பி.மாரியப்பன் மற்றும் மாவட்ட  குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். தோழர் சம்பா ராமசாமி நினைவாக  அவரது மகன் சங்கரய்யா கட்டியுள்ள  இல்லத்தை திறந்து வைத்து ஜி.ராம கிருஷ்ணன் உரையாற்றுகையில், “ஒன்று பட்ட கீழத் தஞ்சை மாவட்டத்தில் நிலவி வந்த நிலச்சுவாந்தர்களின் பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் செங்கொடி இயக்கத்தின் தலைவர்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி னர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை  உறுதிமிக்க போராட்டங்களை கிராமப்புற  மக்களையும் குத்தகை விவசாயிகளை யும் அமைப்பு ரீதியாக திரட்டி போரா டினர்.  கோரிக்கைகளை வென்றெடுக்க எத்த கைய தியாகத்தையும் செய்வதற்கு அன்றைய தலைமுறையினர் தயாராக  இருந்தனர். அதனால் தான் பண்ணை யடிமை முறைகள் ஒழிக்கப்பட்டன. குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. இந்திய விடு தலைக்கு பின்னால் குறிப்பாக கீழத் தஞ்சை மாவட்டத்தில் நிலவி வந்த நிலச் சுவாந்தார்களின் மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட் டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டு கள்.  தோழர்கள் பி. சீனிவாச ராவ், மணலி கந்தசாமி எம்.காத்தமுத்து, பி.எஸ்.தனுஷ் கோடி, கே.ஆர். ஞானசம்பந்தம், ஜி. வீரையன், கோ.பாரதி மோகன், எம்.செல்லமுத்து, வி.தம்புசாமி, என்.கோவிந் தராஜ் போன்ற தலைவர்கள் செங்கொடி  இயக்கத்தின் தலைமையில் மகத்தான  போராட்டங்களை நடத்தி கோரிக்கை களை வென்றெடுத்தனர்.  அன்றைய முதல் தலைமுறையினர், அதன் பிறகு நிலப் பகிர்வுக்காகவும், கூலி  உயர்வுக்காகவும், சமூக பிரச்சனை களுக்காகவும் அடுத்த கட்ட இரண்டாம் தலைமுறை தோழர்கள் வலிமையான போராட்டங்களை மக்களைத் திரட்டி நடத்தி வருகின்றனர்.  இன்றைக்கு இருக்கிற மூன்றாம் இளம்  தலைமுறையினருக்கு கூடுதலான பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம்,  சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளுக் காக உறுதிமிக்க போராட்டத்தை, கோரிக் கைகள் வெற்றி அடையும் வரை நடத்துவ தற்கு இன்றைய இளம் தலைமுறை முன்வர வேண்டும்.  இளம் தலைமுறையினரின் எதிர்கா லத்தையும், தேச நலனை பாதுகாப்பதற் காகவும் எத்தகைய தியாகத்தையும் செய் வதற்கு மன உறுதிமிக்க இளம் தோழர்கள்  போராடுவதற்கு எந்தவித தயக்கமும் இன்றி முன்வர வேண்டும். காஞ்சிவாய் கிராமத்தில் தோழர்கள்  சம்பா எம்.ராமசாமியும், நல்லகண்ணு வும் இணைந்து நின்று கூலி உயர்வுக் காகவும், குத்தகை உரிமைகளுக்காகவும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி கண்டார்கள்” என்றார் பெருமையுடன்.

;