districts

img

விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கு நிதி வழங்கல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க பெரம்பலூர் மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதியின் மகள் ஜெனிபர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பழனிசாமியிடம், உழவன் உரிமை 5 ஆண்டு சந்தா கட்டணம் ரூ.900, சங்கத்தின் அகில இந்திய கட்டிட நிதி ரூ.2100-ஐ தோழர் ஜோதி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எ.கலையரசி, மாவட்டக் குழு உறுப்பினர் தேவி உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.