திருச்சிராப்பள்ளி, ஜூலை 6-
உச்சபட்ச மின்சாரப் பயன்பாடு நேரத்தில் கூடு தல் கட்டணத்தை வசூலிக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்து வதை மின்சார வாரியம் கை விட வேண்டும். மின் இணைப் பில் உள்ள தரமான எலக்ட் ரானிக் மீட்டர்களை அகற் றக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திருச்சிராப்பள்ளி யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தென்னூரில் உள்ள மின் வாரியப் பொறியாளர் அலு வலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன் தலை மை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ரெங்க ராஜன், செல்வராஜ், லால் குடி கோட்டச் செயலாளர் சார்லஸ், நகர் கோட்டச் செய லாளர் ராதா, வட்ட துணைத் தலைவர் ஜான்போஸ்கோ ரவி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீரங்கத்தில் துணைத் தலைவர் கிருஷ்ணன், லால் குடியில் தர்மலிங்கம், மணப் பாறையில் அந்தோணி, துறையூரில் ராமச்சந்திரன், முசிறியில் நடராஜன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திட் டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், கோட்டச் செயலாளர் கே.வினோத், கோட்டத் தலைவர் டி.குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.