தஞ்சாவூர், ஜூலை 5-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர்.திருமலைசாமி தலைமை வகித்தார். அனைத்து இளங்கலை பட்ட வகுப்புகளைச் சேர்ந்த முத லாமாண்டு மாணவ, மாணவிகள் 380 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் கல்லூரி முதல்வர் ஆர்.திருமலைசாமி கூறுகையில், “தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி, கல்லூரியில் காலியாக உள்ள படிப்பு களுக்கு வளாக நேர்காணல் ஜூலை 6 அன்று ஆதிதிராவிடர்களுக்கும், ஜூலை 7 அன்று தகுதியான அனைவருக்கும் நடைபெற உள்ளது. மேலும் அரசு ஒதுக்கியுள்ள கூடுதல் 20 விழுக்காடு சேர்க்கைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.