மயிலாடுதுறை, ஜூலை 4-
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பி னர் செ.ராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், “சுவாமி நாதன் கமிஷன் பரிந்துரை யின்படி குறைந்தபட்ச ஆதார விலைக்கான புதிய குழுவை மீண்டும் அமைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண் டும். மின்சாரத் திருத்த மசோதா 2022-ஐ உடனடி யாக திரும்பப் பெறப்பட வேண்டும். வறட்சி, வெள் ளம், அதிக மழை, பயிர் சார்ந்த நோய்கள் போன்ற வற்றால் ஏற்படும் இழப்பு களை ஈடுசெய்ய அனைத்து பயிர்களுக்கும் விரிவான மற் றும் பயனுள்ள பயிர்க் காப் பீட்டை அரசு செயல்படுத்த வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத் தர விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10,000 உழவர் ஓய் வூதியத் திட்டம் செயல்படுத் தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா 2021 நவம்பர் 21 அன்று மத்திய அரசுக்கு கடி தம் எழுதியது.
இதையடுத்து, விவசா யம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலா ளர் சஞ்சய் அகர்வால், சம் யுக்த கிசான் மோர்ச்சாவிற்கு கடிதம் எழுதி போராட் டத்தை வாபஸ் பெற வலி யுறுத்தினார். இதைத் தொட ர்ந்து, 2021 டிசம்பர் 11 அன்று தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் 18 மாதங்களாகியும் மத்திய அரசு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. இதையடுத்து விவசாயி களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த கிசான் மோர்ச்சா) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் ஜி.ஸ்டாலின், குரு.கோபி கணேசன், அன்பழகன், இரணியன், தெ.மகேஷ், முருகன், ரவி, ஏ.லூர்துசாமி உள்ளிட்ட அமைப்பின் பொறுப்பாளர்கள் இம்மனு வை அளித்தனர்.
மனுவைப் பெற்று கொண்ட மக்களவை உறுப் பினர் செ.ராமலிங்கம் இது குறித்து மக்களவையில் பேசு வதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.