districts

img

வேர் அழுகல் நோயால் முத்தாலம்பாறையில் ஏக்கர் கணக்கில் தக்காளி செடிகள் நாசம்

கடமலைக்குண்டு, மே 19-  தேனி மாவட்டம், கட மலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே  மூலக்கடை, முத்தாலம் பாறை, தாழையூத்து, கரு மலைசாஸ்தாபுரம் உள்  ளிட்ட கிராமங்களில் பல ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் தக் காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.  கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு வரை போது மான அளவில் மழை பெய்த காரணத்தால் செடிகளில் தக்காளி விளைச்சல் அதி கரித்து காணப்பட்டது. குறை வான விலைக்கு விற்பனை யானாலும் விளைச்சல் அதி கரித்து காணப்பட்டதால் தக்  காளிகளை பறித்து சந்தை களுக்கு அனுப்பும் பணி களில் விவசாயிகள் மும்முர மாக ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில் கடந்த  சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக முத்  தாலம்பாறை மற்றும் அத னைச் சுற்றியுள்ள கிராமங்க ளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே போல பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதி கரித்து காணப்படுகிறது. மழைப்பொழிவு மற்றும் வெயில் தாக்கம் காரண மாக தற்போது முத்தாலம் பாறை பகுதியில் தக்காளி செடிகளில் வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு வரு கிறது.  இந்த நோயால் பாதிக்கப்  பட்டு ஏராளமான ஏக்கர் பரப்ப ளவில் தக்காளி செடிகள் அழிந்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவ லையடைந்துள்ளனர்.  இது தொடர்பாக முத்தா லம்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறு கையில், இந்த சீசனில் தக்  காளி விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. அதேபோல சந்தைகளிலும் விலை கணிச மாக உயர்ந்து வந்தது. தற் போது 14 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி 160 ரூபாய்  வரை சந்தைகளில் விற்பனையாகிறது. இத னால் அதிக அளவில் லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏற்படாமல் இருந்தது. சந்தைகளில் விலை அதிகரிக்கும் என்ற  நம்பிக்கையில் அனை வரும் விவசாயத்தில் ஈடு பட்டிருந்த நிலையில் தற் போது வேர் அழுகல் நோய்  காரணமாக பெரும்பாலான தக்காளி செடிகள் அழிந்து விட்டன.  இதனால் சாகு படிக்கு செய்த செலவை கூட எடுக்க முடியாத நிலை ஏற்  பட்டுள்ளது. கடந்த ஆண்டும்  விலை குறைவால் தக்காளி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.  தற்போது கனமழையின் காரணமாக தக்காளி செடிகள் அழிந்து  மீண்டும் நஷ்டம் ஏற்பட்டுள்  ளது. தொடர்ந்து நஷ்டத்தை  சந்தித்து வரும் விவசாயி களுக்கு அரசு சார்பில் நிவா ரணத் தொகை வழங்க வேண்  டும் என்று வலியுறுத்தினர்.

;