districts

img

கத்திரிக்காய் விலை சரிவு: செடியிலேயே விடும் விவசாயிகள்

பாபநாசம்,  மே 31 - வரத்து அதி கரித்ததன் காரண மாக, கத்திரிக்காய் விலை சரிவடைந்த தால், விவசாயிகள் கத்திரிக்காயை பறிக் காமல் செடியிலேயே விட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் மாவட் டம் பாபநாசம் சுற்று  வட்டாரப் பகுதிகளில் அதிகளவு கத்திரிக்காய் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. சந்தையில் கத்திரிக்காய் வரத்து அதிகரித்ததால் விலையில் சரிவு ஏற்பட்டது.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த 6  மாதத்திற்கு முன்பு கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கு விலை போனது. தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் கீழேதான் போகிறது. இதனால் அறுவ டைக்கு தயாரான நிலையிலும், போதுமான விலை இல்லாததால், கத்திரிக்காயை பறிக்காமல் விட்டு விடு கிறோம்” என்றனர்.

;