districts

திருச்சி முக்கிய செய்திகள்

வேளாண் மாணவிகள் நடத்திய திரவ உயிர் உரங்கள் கண்காட்சி

தஞ்சாவூர், மே 15-  ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாண விகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ள னர். இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு அருகே பசுபதிகோயிலில் உள்ள எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கிராம வள மையத்தில்,  வேளாண்மை கல்லூரி மாணவிகள் திரவ உயிர் உரங்கள்  பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்வில் திரவ உயிர் உரங்கள் பயன் படுத்தும் முறையை பற்றிய செயல் விளக்க பணியில்  ஈடுபட்டனர். இது மட்டுமன்றி அதிக பயன்பாட்டில் இருக்கும் சில திரவ உயிர் உரங்கள் அடங்கிய கண்காட்சி யையும் மாணவிகள் நடத்தினர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு ஸ்ரீமகாதேவ குருஜி வித்யாலயா பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

திருவாரூர், மே 15 - திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஸ்ரீமகாதேவ  குருஜி வித்யாலயா பள்ளி மாணவர்கள் 11 ஆம் வகுப்பு  பொதுத் தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று 25 ஆவது  ஆண்டாக தொடர் சாதனை புரிந்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் நடந்து முடிந்த 10 மற்றும் 12  ஆம் வகுப்பு தேர்விலும் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ள னர். இதைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பிலும் 100 சத வீதம் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் முதல் மூன்று தரவரிசை பட்டியலில் இடம்  பிடித்த மாணவர்கள் வி.சக்தி 586 மதிப்பெண் பெற்று முத லிடமும், எம்.ஹரிணி 585 மதிப்பெண் பெற்று இரண்டாம்  இடமும், டி.ஆதவன் 584 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய 68 மாணவ-மாணவி களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 550 மேல்  12 மாணவர்களும், 500-க்கு மேல் 21 மாணவர்களும், 400 -க்கு மேல் 35 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை  புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் எம்.டி.பாணி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா?
நடமாடும் பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு

தஞ்சாவூர், மே 15-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தர வின்படி, பட்டுக்கோட்டை நகர் மற்றும் வட்டாரப் பகுதி களில் அனைத்து கடைகள், விற்பனை நிலையங்கள், உண வகங்களில் உள்ள உணவுப் பொருட்களில் கலப்படங்கள்  உள்ளதா என வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவ லர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.  ஆய்வின்போது நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூடம்  அங்கு வரவழைக்கப்பட்டு, கடைகளில் இருந்து எடுக்கப் பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாறு 30 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு முடிவு கள் உடனடியாக வழங்கப்பட்டன. இதில் 25 உணவு மாதிரிகள் தரமானதாகவும், 5 உணவு மாதிரிகள் கலப்படம் மற்றும் தரமற்றதாக இருப்பதும் கண்டறியப்பட்டது.  தரமற்ற மற்றும் கலப்பட உணவுகள் கண்டறியப் பட்ட ஐந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணயச்  சட்டம்-2006, பிரிவு 55 இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.  மேலும் தரம் குறைவான உணவை விற்பனை செய்த  உணவகத்திற்கு ரூ.3,000, தடை செய்யப்பட்ட நெகிழிப் பை  பயன்படுத்திய ஒரு கடைக்கு ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் கூறுகையில், “இந்த நடமாடும்  உணவு பகுப்பாய்வு கூடம் ஒவ்வொரு பகுதிக்கும் மாதம்  இரண்டு முறை வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் படும். மக்கள் அன்றாடம் வாங்கும் மற்றும் பயன் படுத்தப்படும் உணவுகள் தரம் குறைந்தது மற்றும் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த உணவு  பொருட்கள் உடனடியாக அழிக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் கலப்படம் மற்றும் தரமற்ற, தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடை கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

குந்தவை நாச்சியார் கல்லூரி  தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர், மே 15-  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 2023–2024 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவத் தேர்வு (ஏப்ரல்-2024) முடிவுகளை தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர்விழி, மே 14 (செவ்வாய்க்கிழமை) அன்று கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் துறைத் தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.  மேலும், இதன் விவரம் கல்லூரியின் www.kngac.ac.in என்ற இணையதளத்தில் அன்று மாலை வெளியிடப்பட்டது.  மறு கூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6. மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 8 மற்றும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 11.  எனவே இது தொடர்பாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் கல்லூரியின் தேர்வு நெறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து கிடக்கும் கிளை நூலகம்
புதிய கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை

திருவாரூர், மே 15 - குடவாசல் பேரூராட்சிப் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் குடவாசல் கிளை நூலகத்திற்கு சாலை வசதி, கட்டிட வசதி வேண்டும் என வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் காந்தி பூங்கா பின்புறத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக முழு நேர நூலகமாக இயங்கி வரும் குடவாசல் கிளை நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு தினமும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து, செய்தி, போட்டித் தேர்வு புத்தகங்கள் மற்றும் மாத இதழ்களை படித்துச் செல்கின்றனர். இந்நிலையில் நூலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால், வாசகர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இங்குள்ள நூலக கட்டிடமானது, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது நூலக கட்டிடம் பழுதாகி சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு கட்டிடம் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் மற்றொரு கட்டிடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அக்கட்டிடத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடவசதி இல்லை. மேலும் நூலகத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் குறுகலான பகுதியில் வாகனங்களை திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை நேரங்களில் சாலை சேறும் சகதியுமாகி நூலகத்திற்கு வாசகர்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பழுதாகி பயனற்றுக் கிடக்கும் பழைய நூலகத்தை இடித்துவிட்டு, புதிய நூலகக் கட்டிடம் கட்ட வேண்டும். நூலகத்திற்கு சாலை வசதி வேண்டும் என வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது செயல்பட்டு வரும் நூலக கட்டிடம் குடவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான இடமாகும். ஆகையால் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே வாசகர்கள் நலன் கருதி, குடவாசல் நூலகத்திற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு வருவாய்த்துறை மூலம் மாற்று இடம் தேர்வு செய்து, தாமதமின்றி கட்ட வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை  உறவினர்கள் சாலை மறியல்

அரியலூர், மே 15- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தை களின் உடல்நிலை மோசமான பிறகு, மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூருக்கு பரிந்துரை செய்த மருத்துவர்களை கண் டித்து உறவினர்கள் சாலை மறி யலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் அருகே புதுப் பாளையம் கிராமத்தில் மெயின்  ரோட்டில் வசிப்பவர் ரமேஷ். திங்களன்று அதிகாலை குடி போதையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சந்திரனின் கட்டுப் பாட்டை இழந்த லாரி, ரமேஷ் வீட்டின் சுவரை உடைத்து உள்ளே சென்றுள்ளது. லாரி புகுந்ததில் வீட்டிற் குள் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷின் மனைவி அம்பிகா, அவரது குழந்தைகளான ரா ஜேஷ், ரம்யா, சுபாஷ் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந் தனர். இவர்கள் நான்கு பேரும்  சிகிச்சைக்காக அரியலூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்ட னர். விபத்தில் ரமேஷின் வீடு  முற்றிலும் சேதம் அடைந்த தோடு, வீட்டிலிருந்த ஃபிரிஜ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் சேதமடைந்தன. அரியலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த  குழந்தைகளை மேல் சிகிச்சைக் காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவி னர்கள் செவ்வாயன்று கூறி யுள்ளனர். மருத்துவமனை தரப் பில் இதற்கு அனுமதி வழங்கப் படவில்லை என்று கூறப்படு கிறது.  இந்நிலையில் புதனன்று  காலை குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு செல்ல மருத் துவர்கள் அறிவுறுத்தியுள்ள னர். செவ்வாயன்று மறுத்து விட்டு, காலம் தாழ்த்தி புத னன்று அழைத்துச் செல்லுமாறு  மருத்துவர்கள் கூறியதை கண் டித்து, உறவினர்கள் அரியலூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  விபத்தை ஏற்படுத்திய லாரி  கம்பெனி நிர்வாகத்தில் இருந்து  உரிய இழப்பீட்டுத் தொகையை  பெற்றுத் தர வேண்டும். குழந் தைகளின் உடல்நிலையை சரி யாக கவனிக்காத மருத்துவத் துறை மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தினர். மேலும் அரியலூர் - பெரம் பலூர் தேசிய நெடுஞ்சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீ சார், அவர்களை சமாதானப் படுத்தி அரியலூர் கோட்டாட் சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அரிய லூர் கோட்டாட்சியர் ராம கிருஷ்ணன், உரிய நடவ டிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், குழந்தையை சிகிச்சைக் காக தஞ்சாவூருக்கு அழைத் துச் செல்ல ஒப்புக்கொண்டு சாலை மறியலை கைவிட்டனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
தஞ்சையில் 56,023 பேர் பயன்: ஆட்சியர்

தஞ்சாவூர், மே 15-  தஞ்சாவூர் மாவட்டத்தில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத் தின்கீழ் 56,23 பேர் பயன் பெறுவ தாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஆட்சியர் கூறுகை யில், “தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான நல்வாழ்வுத் திட்டங்க ளின் வரிசையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால், தமிழ் நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும்  ஊரகப் பகுதிகளில் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு  தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயி லும், 18.5 லட்சம் மாணாக்கர்கள் பய னடைந்து வருகின்றனர். முதலமைச்சரின் நல்லாட்சியில் சீர்மிகு இத்திட்டம், ஏனைய பிற  மாநிலங்கள் மட்டுமின்றி, அயல்நா டான கனடாவிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்பது வரலாற்றுச் சிறப்புக்குரியது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும்,  இத்திட்டத்தின் வாயிலாக 56,023 மாணாக்கர்கள் பயன்பெற்று வரு கின்றனர்” என்றார். இத்திட்டத்தின் மூலம் பயன டைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கதிரேசனின் பெற் றோர் தெரிவிக்கையில், “எனது பெயர் அஞ்சலை. எனது மகன்  கதிரேசன், தஞ்சாவூர் இராஜப்பா நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளி யில் ஐந்தாம் வகுப்பு படித்து வரு கிறான். நான் தினமும் கூலி வே லைக்கு சென்று கொண்டிருக் கிறேன். சில நேரங்களில் வேலைக் குச் செல்ல காலதாமதம் ஆகிவிடும் என்பதால் காலை உணவை வீட்டில்  சமைப்பதில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்று வந்தனர்.  இப்பொழுது தமிழக முதல்வர் காலை உணவுத் திட்டத்தினை அறி முகப்படுத்திய பின்னர் என் குழந்தைகள் தினமும் காலை உண வினை பள்ளியில் சூடாக சாப்பிடு கின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் காலை உணவு திட்டத்தை அளித்த  தமிழக முதல்வருக்கு நன்றி” என்றார்.  இவ்வாறு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப் பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தொகுப்பு:  ரெ.மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்

25 ஆண்டுகளாக பணி நியமனமே இல்லை 
பணிப்பளுவால் மன உளைச்சலில் செவிலியர்கள்

மதுரை, மே 15- தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி நகர  சுகாதார செவிலியர் சங்க மாநில தலை வர் பஞ்சவர்ணம் மதுரையில்  திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  “ 25 ஆண்டுகளாக பணிநியமனமே இல்லை. செவிலியர்கள் குறைவால் பணிப்  பளு அதிகரித்துள்ளது. புதிய பதிவேற்றம் செயலியை பயன்படுத்துவதால் நாள் முழு வதும் கணினி பயன்பாட்டிலேயே நேரம் செலவாகிறது. தமிழகத்தில் கிராமங்களில் ஆரம்ப  சுகாதார நிலையம் போல, நகராட்சி, மாநக ராட்சிகளிலும் சுகாதார செவிலியர்கள் பணி யாற்றி வருகின்றனர். வீடுகள் தோறும் சென்று கர்ப்பிணி களை கணக்கெடுப்பது, பராமரிக்கும் பணி களில் ஈடுபட முடியவில்லை. மகப்பேறு உதவி, கர்ப்பிணிகளை கண்டறிந்து அவர்களை கண்காணித்து பரா மரிப்பது உட்பட பல்வேறு  பணிகளை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் 5 ஆயி ரம் பேருக்கு ஒருவர் என 2 ஆயிரத்திற்கு மேல் இருந்த  செவிலியர்கள், தற்போது 15 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்று 500 பேர் உள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ப நியமிக்கா ததால் வேலைப்பளு அதிகரித்து நகர்ப்புற செவிலியர்கள் மனஉளைச்சலில் உள்ள னர். ஏற்கனவே ‘பிக்மி 2.0’ என்ற சாப்ட்வேரில் களப்பணியை பதிவு செய்வர். தற்போது புதிதாக ‘பிக்மி 3.0’ என்ற    சாப்ட்வேர் அறிமுகமாகியுள்ளது/ இதில் கர்ப்பிணிகளின் போட்டோ மற்றும் விவரங்களை 50 கிலோ பைட்டுக்கு குறை த்து பதிவேற்றினால்தான்           அவர்களுக்கு  பிக்மி நம்பர் வழங்க முடியும். நகர்ப்புற செவிலியர்கள் 30 ஆண்டு களாக பதவி உயர்வையே பார்க்க முடிய வில்லை. அதேசமயம் கிராம செவிலி யர்கள் இரண்டாவது பதவி உயர்வுக்கு தயாராக உள்ளனர். ஒரே பணியில் உள்ளவர்களுக்கு ஏன் இந்த  வேறுபாடான நிலை என கேள்வி எழுப்பு கின்றனர். மேலும் அரசு சுகாதாரத் துறை இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு 

தேனி, மே 15-  கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்றுடன்  நிறைவடைந்தது தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்காக கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. கடந்த 7 ஆம் தேதி திரு விழா தொடங்கியது. 24 மணிநேரமும் நடை திறக்கப் பட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  பக்தர்களின் வசதிக்காக இரண்டு வழித்தடங்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. உச்சநிகழ்வாக தேரோட்டம்  கடந்த 10 ஆம் தேதி  நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ரதவீதி களில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தேர் நிலைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் நிலை பெயர்த்தல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிழா நிறைவுக்கு வந்தது.

;