districts

img

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கும்பகோணம், ஜன.4- சாதி, மதம் வேறுபாடு இன்றி கும்பகோ ணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ, மாணவி யர்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். பறையாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம் போன்றவை களும் இடம் பெற்றன.   இந்நிகழ்ச்சியில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர்  எஸ்.ஏ.கார்த்திகேயன் உரை யாற்றினார்.  பள்ளி தாளாளர்  பூர்ணிமா கார்த்திகேயன்   மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழினை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.