districts

திருச்சி முக்கிய செய்திகள்

போலி மருத்துவர் கைது

அரியலூர், ஜூன் 16- அரியலூர் மாவட்டம் திரு மானூர் அருகே உள்ள விரகா லூர் மெயின் ரோட்டில் விக்னேஷ் வரன் என்ற பெயரில் மருந்து  கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்கா மல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருமானூர் வட்டார  மருத்துவ அலுவலர் மணி வண்ணனிடம் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவர் மணிவண்ணன், மருந்து கடையை ஆய்வு செய்த போது, ஆங்கிலம் மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.  இதனையடுத்து பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் வகையில் ஆங்கில மருத்து வம் பார்த்த, தஞ்சாவூர்  மாவட் டத்தைச் சேர்ந்த பன்னீர்செல் வம் மீது திருமானூர் காவல்  நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பன்னீர் செல் வத்தை கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.

12 கிலோ கஞ்சா  பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சிராப்பள்ளி,  ஜூன் 16 - கஞ்சா விற்பனையை தடுக்க, திருச்சி மாநகரில் மாநகர காவல் ஆணையர் காமணி உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் போலீ சார் ரோந்து மற்றும் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.  இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி சாலையில் அடிக்கடி சிலர் கஞ்சா விற்றுக்  கொண்டிருப்பதாக மதுவிலக்கு  போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு  காவல் உதவி ஆய்வாளர் உமாசங்கரன் தலைமையி லான போலீசார், வ.உ.சி சாலைக்கு சென்று பார்த்த போது அங்கு ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.  போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் இராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த செல்வம் (54) எனவும், இவர் திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்துள்ள னர்.  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து  20 ஆயிரம். மேலும் அவரிட மிருந்து 2 செல்போன்களையும் கைப்பற்றினர்.

தடுப்புச் சுவரில்  கார் மோதி விபத்து 

அரியலூர், ஜூன் 16- ஜெயங்கொண்டம் அருகே  சாலையின் தடுப்புச் சுவரில்  கார் மோதி விபத்துக்குள்ளான தில் அதிர்ஷ்டவசமாக 13 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து  நன்னிலம் பகுதியில் நடைபெ றும் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்வதற்காக டவேரா காரில்  13 பேர் ஞாயிறன்று அதிகாலை  பயணம் செய்து கொண்டிருந்த னர். அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணியில் வந்த போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர பாலத்தின் தடுப்புச் சுவ ரில் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பலத்த காய மடைந்தனர். மற்ற அனை வரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்  தப்பினர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கர ஆயுதங்களுடன்  சுற்றிய 4 வாலிபர்கள் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- திருச்சி பாலக்கரை காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  ​முதலியார் சத்திரம் பெல்சி மைதானம் ரயில்வே குடியிருப்பில்  ரோந்து சென்ற போது, 6 பேர் அங்கு நின்று கொண்டி ருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் வேகமாக தப்பி ஓடி னர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றதில், நான்கு பேர்  சிக்கிக் கொண்டனர். 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  பிடிபட்ட வாலிபர்களிடமிருந்து 2 கத்தி, உருட்டு கட்டைகள்,  ரோப் கயிறு, மிளகாய் தூள் பாக்கெட் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த வாலிபர்களிடம் ஆய்வாளர் பெரியசாமி விசா ரணை நடத்தியதில், அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர்கள் திருச்சி பாலக்கரை காஜாபேட்டை  மேல கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த கார்த்தி என்ற கார்த்தி கேயன் (20), நட்டு (எ) நடராஜன் (22), கீழப்புதூர் அம்மன்  கோவில் தெருவைச் சேர்ந்த விஜய் (23), அஜித் (23) என்ப தும் தெரிந்தது.  வாலிபர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த னர். பிறகு 4 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். மேலும், தனுஷ், சபரி ஆகிய இரண்டு வாலி பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குவைத் தீ விபத்தில் இறந்த இளைஞர்  குடும்பத்துக்கு எம்.பி., எம்.எல்.ஏ. ஆறுதல்

தஞ்சாவூர், ஜூன் 16- குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில், இந்திய தொழி லாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய  தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆதனூரைச் சேர்ந்த புனாஃப்  ரிச்சர்ட் ராய் (27) உயிரிழந்தார்.  இவருடைய உடல் குவைத் நாட்டில் இருந்து வெள்ளிக் கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் உயிரி ழந்த வாலிபர் புனாஃப் ரிச்சர்டு ராய் இல்லத்திற்கு சென்று,  அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் புனாஃப் ரிச்சர்ட் ராயின் பெற்றோர், “தாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், தங்களது இளைய மகன்  ரூசோவுக்கு (25) அரசு வேலை பெற்றுத் தர வேண்டும். குவைத் நாட்டில் தங்கள் மகன் பணியாற்றிய நிறுவனத்தி டம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரி  மனு அளித்தனர்.  இதையடுத்து மாவட்ட ஆட்சியர், வெளிநாடு வாழ்  தமிழர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடம்  எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளு மன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களிடம் உறுதியளித்தனர்.

‘ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள்’ பயிற்சிப் பட்டறை

கரூர், ஜூன் 16 - தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் இந்தியன் இன்ஸ்டி ட்யூட் ஆப் ஹ்யுமன் செட்டில் மென்ட்ஸ் நிறுவனம் மூல மாக கரூரில் உள்ள தனி யார் விடுதியில் “ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள்” குறித்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஜூன்  14, 15 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. சனிக்கிழமை நடை பெற்ற இரண்டாம் நாள் பயிற்சிப் பட்டறையில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் கலந்து கொண்டார். இதில் காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பேரிடர்கள் குறித்தும், அதனை எதிர் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசி யம் குறித்தும், உலகளாவிய பசுமை கட்டிட விதிமுறை களை கடைப்பிடிக்கவும், மரபு சார் எரிசக்தி உபயோ கத்தை குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  பயன்பாட்டினை அதிகப் படுத்தவும், கட்டிட பொறியா ளர்கள் பசுமை கட்டிடங்கள்  குறித்த தங்கள் சந்தேகங்க ளையும், மக்களிடம் பசுமை  கட்டிடங்கள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டிய தன் அவசியம் குறித்த பயிற்சிப் பட்டறையில் துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள்  கருத்துகளைத் தெரிவித்த னர். இரண்டாம் நாள்  பயிற்சிப் பட்டறையில் மாவட்ட ஆட்சியர் தங்க வேல் தெரிவிக்கையில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியிருப்போர் நல  சங்கத்தினருக்கு வீடுகள்  மற்றும் தங்கள் குடியிருப்பு  வளாகங்களில் சுற்றுச்சூழ லுக்கு உகந்த செயல்முறை களை எவ்வாறு மேற்கொள் வது என்பது குறித்த பயிற்சி கள் வழங்கப்பட்டு வரு கின்றன.  தமிழ்நாடு, காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதில் முன்னோடி யாக உள்ளது. அரசுடன், தனியார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதுணையாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் கழிவுகளை கொட் டுவதை தவிர்க்க வேண் டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை  தவிர்க்க வேண்டும். மின்சா ரத்தை சேமிக்க வேண்டும் எனவும், அனைவரும் சுற்றுச் சூழலுடன் இணைந்து ஆரோக்கியமான வாழ்வை வாழவும், நம் கரூர் மாவட் டத்தை காலநிலை திறன்மிகு  மாவட்டமாக மாற்ற உறுதி பூணுவோம்” எனவும் தெரி வித்தார்.  ஐ.ஐ.எச்.எஸ் நிறுவனத் தைச் சார்ந்த விஸ்வநாத் மற்றும் மோனிஷா ஆகி யோர் இப்பயிற்சிகளை வழங்கினர்.

சத்திரம் பேருந்து நிலைய  கடைகளின் வாடகை சுமார்  ரூ.10 லட்சம் உடனடி வசூல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16 - திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப் பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் திருச்சி மாநக ராட்சிக்கு சொந்தமாக சுமார் 35 கடைகள் உள்ளன. இந்த  கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவர்கள் கடந்த 18  மாதங்களாக சுமார் ஒரு கோடியே 62 லட்சத்திற்கும் மேல்  வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்தனர்.  அதில் வாடகைக்கான வைப்புத் தொகையை (டெபாசிட்) கடந்து, வாடகை பாக்கி வைத்துள்ள 4 கடை களை மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த னர். எஞ்சிய 20 கடைகள் கண்டறியப்பட்டு, வாடகை தொகையை கடை நடத்துபவர்கள் உடனே செலுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாநகராட்சி ஆணையர் சரவணன் உத்தர வின் பேரில் பேருந்து நிலையத்திற்குள் இருந்த ஆக்கிர மிப்பு கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி னர். கடை வாடகைக்கான வைப்புத் தொகையைக் கடந்து,  வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகளை அதி காரிகள் பூட்டி சீல் வைத்தவுடன், சுமார் 10 லட்சம் ரூபாய்  மாநகராட்சிக்கு வாடகை பாக்கி வசூலானது. அதில்  வாடகை பாக்கியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டும் கடை மீண்டும் திறந்து விடப்பட்டது.

தனியார் பேருந்தை இயக்கி  விபத்தை ஏற்படுத்திய போதை நபர்

அறந்தாங்கி, ஜூன் 16- அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து  ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற  நேரத்தில், போதையிலிருந்த நபர் பேருந்தை இயக்கிய தால் விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலை யத்தில் நின்று கொண்டிருந்த கே.பி.எல் தனியார் பேருந்தை, கிடங்கி வயல் பகுதியைச் சேர்த்த ரகு என்ற இளைஞர் போதையில் பேருந்து நிலையத்திலிருந்து கட்டு மாவடி முக்கம் வழியாக ஓட்டிச் சென்றுள்ளார். இதில் பேருந்தை, எல்.என்.புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் சிக்கன் நூடுல்ஸ் கடை மீது  மோதி வாகன விபத்து ஏற்படுத்தியுள்ளார். அருகில் இருந்த வர்கள் உடனடியாக பேருந்தை இயக்கிய நபரை பிடித்து  விசாரணை செய்தனர். அதில், அவர் ஆவுடையார்கோ வில் தாலுகா கிடங்கிவயல் பகுதியைச் சேர்ந்த ரகு  (32) என தெரிய வந்தது. மேலும், பேருந்து நிலையத்தில்  சாவியை வண்டியிலேயே வைத்ததால் எனக்கு பேருந்து  ஓட்ட ஆசையாக இருந்தது. அதனால் ஓட்டி வந்தேன் என  கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இச்சம்பவத்தை அறிந்த அறந்தாங்கி காவல்துறையி னர் மது போதையில் இருந்த நபரை அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில்  பேருந்துகளை நிறுத்தும் ஓட்டுநர்கள், சாவியை எடுத்து  பத்திரப்படுத்துவது நல்லது. இதேபோன்று, ஐந்து மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் 50 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது குறிப் பிடத்தக்கது.

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: திருச்சியில் 4,705 பேர் எழுதினர்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்  சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு திருச்சியில் 12 மையங்க ளில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் 4705 பேர் தேர்வு  எழுதினர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்ப டும் குடிமைப் பணிகளுக்கானத் தேர்வுகள் நடத்தப்படு கின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ, குரூப் பி  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியி டங்களுக்குத் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 1206  பணியிடங்களுக்கான, குடிமைப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு ஞாயிறன்று நாடு முழுவ தும் நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 11:30 மணி  வரையிலும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4:30  மணி வரையிலும் என இரண்டு தாள்களுக்கு தேர்வு நடை பெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 4,705 பேர் இந்த  தேர்வினை எழுதினர். தேர்வுக்கூட மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருச்சி மாந கரில் அமைக்கப்பட்டுள்ள வெஸ்ட்ரி பள்ளி, செயின்ட் ஜேம்ஸ் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

ஜூன் 19 ஒரத்தநாட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம் 

தஞ்சாவூர், ஜூன் 16-  மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்கு டன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜூன் 19 (புதன்கிழமை) அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலை மையில் அனைத்துத் துறை அலுவலர்கள் முகாம் மேற் கொண்டு ஜூன் 19 அன்று காலை முதல் களஆய்வுப் பணி  மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  தொடர்ந்து அன்று மதியம் 2.30 மணியளவில் தொடர்பு டைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமானது, ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஜூன் 19 அன்று மாலை 04.30 மணியளவில் ஒரத்தநாடு  வட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் குறைகளைக்  கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.  அதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன டையுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார்.

கோட்டப் பொறியாளர்களை கண்டித்து சாலை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜூன் 25-இல் நடத்த திட்டம் தஞ்சாவூர், ஜூன் 16-  தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் சார்பில், உதவிக் கோட்டப் பொறியாளர்களின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஜூன்  25 ஆம் தேதி மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சங்க கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை யில் நடைபெற்றது. திருச்சி மண்டல பிரதிநிதி கண்ணன் வேலை அறிக்கை வாசித்தார். அனைத்து உட்கோட்டங்களிலும் இருந்து பங்கேற்ற சாலை ஆய்வாளர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் கோதண்டபாணி சிறப்புரை ஆற்றினார். தஞ்சை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகில் காலியாக உள்ள திறன்மிகு உதவியாளர் நிலை பணியிடத்தை, திறன்மிகு உதவியாளர் நிலை - 2 இல் முதுநிலை வரிசைப்படி நிலை 1 இல் வழங்க வேண்டும். தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகில் உள்ள திறன் மிகு உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் திருவிடைமருதூர் உதவி  கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர், பட்டுக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன்  25 அன்று தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் முன்பு மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காய்கறிகளை உழவர் சந்தையில்  விற்க விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூர், ஜூன் 16 - ஜெயங்கொண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் விளையும் காய்கறிகளை ஜெயங்கொண்டம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து கூடுதல் வருமானம் பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் நேரடியாக தங்களிடம் காய்கறிகளை வாங்கும்போது, அவர்களுக்கும் திருப்தி ஏற்படுகிறது. விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகள் ஜெயங்கொண்டம் உழவர் சந்தைக்கு  காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்திட, வேளாண்மை துணை  இயக்குநர் (வேளாண் வணிகம்) பெரம்பலூர் எஸ்தர் பிரேமகுமாரி அழைப்பு  விடுத்துள்ளார். மேலும் தொடர்புக்கு விவசாயிகள் ஜெயங்கொண்டம் உழவர் சந்தை அலுவலர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;