districts

நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

திருவாரூர்,  ஜூலை 7-

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில்  மாவட்ட ஊராட்சிகளின் சாதாரண கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு  மாவட்ட ஊராட்சி தலை வர் ஜி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.  

    சாலை மற்றும் கடை மடைப் பகுதிகளின் சில இடங்களில் இன்னும் மேட்டூர் நீர் வரவில்லை. சம்பா மற்றும் குறுவை  சாகுபடிக்கு ஏற்ற வகை யில் உரங்கள், வேளாண் கடன்கள் வழங்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண் டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

   முன்னதாக மாவட்ட திட்ட குழு சார்பாக உணவு மற்றும் வேளாண் குழு, தொழில்நுட்ப, தொழிலாளர் நலன், மது விலக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் கல்விக் குழு என  ஒரு குழுவுக்கு, ஒரு தலை வர், 3 உறுப்பினர்கள் என்ற வகையில் நிலைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.