districts

img

கல்விக்கடன் ஆலோசனைகள் பெற உதவி மையம் துவக்கம்

கரூர், மே 30-

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாவட்ட  முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் சம்பந்தமான ஆலோசனை களைப் பெறுதல் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி அறிய  ஆலோசனை உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் வெளியிட்டார்.  

    ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வியை தொடர மாண வர்களுக்கான வங்கி கல்வி கடன் முனைப்பு திட்டம் ஏற்பாடு செய்யப்  பட்டுள்ளது. கல்வி கடன் பெற உதவி வேண்டுவோருக்கு, ஆலோ சனை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி கூடுதல் விவ ரங்கள் தேவைப்படுவோர் 04324-234815 என்ற தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி lbdkarur@gmail.com மற்றும் வாட்ஸப் எண் 94426-13165 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளர் வசந்த் குமார், முன் னோடி வங்கி அலுவலர் கவி பசுபதி, கரூர் மாவட்டத்தின் நிதிசார் கல்வி ஆலோசகர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.