திருச்சிராப்பள்ளி, ஜூன் 8- ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவுகளில் அவுட்சோர்சிங், ஒப்பந்த வேலைகளை திரும்பப்பெற வேண்டும் என்று டிஆர்இயு வலியுறுத்தியுள்ளது. டிஆர்இயு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று திருச்சியில் உதவி கோட்டத் தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் எஸ்.ராஜா துவக்க உரையாற்றினார். கோட்டச் செயலாளர் ஆர்.கரிகாலன், கோட்டப்பொருளாளர் பி.லட்சுமிபதி ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் வாழ்த்திப் பேசினார். டிஆர்இயு பொதுச்செயலாளர் வி.ஹரிலால் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், பொன்மலை மருத்துவமனை சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தடையில்லாமல் மருத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். திருச்சி கோட்ட இன்ஜினியரிங் பிரிவு அனைத்து கேட்டுகளிலும் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். இன்ஜினியரிங் பிரிவில் 2800 LEVEL. (5) பெறும் வரை அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டு தண்டவாளத்தையே பார்க்காமல் நேரடியாக மேஸ்திரி பிரமோஷன் வந்தவுடன் களத்திற்கு வருவதை தடுக்க வேண்டும். சேப்டி கேட்டகிரி பிரிவுகளில் விடப்பட்டுள்ள அனைத்தது அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த வேலைகளை திரும்பப்பெற வேண்டும். கட்டி முடித்த பின்பும் பல ஆண்டுகளாக நீடாமங்கலம் ரயில்வே குடியிருப்பு தொழிலாளர்களுக்கு கொடுத்த பின்பும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எலக்ட்ரிக்கல் ஏசி பிரிவில் அட்டெண்டர் வேலைகளை காண்ட்ராக்ட் விடும் முடிவினை நிர்வாகம் கைவிட வேண்டும்.திருச்சி ரயில் கல்யாண மண்டப கமிட்டியை உடனே கூட்ட வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.