அரியலூர், டிச.6 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள கொட்டாகார தெருவில் உள்ள வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வடிகால் வசதி இல்லாமல் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. இந்நிலையில் ஞாயிறன்று இரவு பெய்த கனமழை காரணமாக வயல்காடு மற்றும் தெருக்களில் உள்ள தண்ணீர் வடிய வழி இல்லாததால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் புகுந்து பாழாகிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தெருவின் குறுக்கே மரங்களை கட்டி மறைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.