நாகப்பட்டினம், செப்.3- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி நினைவால யத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு செங்கல் தானமாக வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி நினைவாலயத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவ தற்கு செங்கல் தானமாக வழங்கும் நிகழ்வு திருவாரூர் சிஐடியு மாவட்டத் தலைவர் பி. நடராஜன் தலைமையில் நடைபெற்றது. உழைக்கும் மக்களின் ஒப்பற்ற நினைவுச் சின்னமாக, பாட்டாளி வர்க்கத்தின் வீர சமர்புரிந்த வெண்மணி தியாகிகளுக்கு நினை விடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது, இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் கட்டப்படுகிற வீர வெண்மணி தியாகிகள் நினைவகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற் கான நிதி திருவாரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிதியினை இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பெற்றுக் கொண்டார். திரு வாரூர் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், நாகை மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.