மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், மாதிரிவேளுர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி புதனன்று திறந்து வைத்தார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.விஜயகுமார், உதவி இயக்குநர் மரு.ஈஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயபாரதி, ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.