திருவாரூர், ஜூலை 7 -
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதனொரு பகுதியாக, ஜூலை 1 முதல் திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கை மான், நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் பெறப்பட்ட சந்தா தொகை, முதற்கட்டமாக சிபிஎம் மத்தியக் குழு உறுப்பி னர் பெ.சண்முகத்திடம், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
திருவாருர் ஒன்றியத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தீக்க திர் ஆண்டு சந்தா 10-க்கான தொகையை வழங்கினார். திருவாரூர் நகரத்தில் நகரச் செயலாளர் (பொ) ஆர்.ராஜசேகர் 10 ஆண்டு சந்தா மற்றும் அரையாண்டு சந்தா - 4, தினசரி சந்தா 26-க்கான தொகையை வழங்கினார்.
நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் ஆண்டு சந்தா-35, அரையாண்டு சந்தா-4 மற்றும் தினசரி சந்தா 5-க்கான தொகையை வழங்கினார். பேரளம் நகரம் சார்பாக நகரக் குழு செயலாளர் சீனி.ராஜேந்தி ரன், 13 ஆண்டு சந்தாவுக்கான தொகையை வழங்கினார். குடவாசல் (வடக்கு) எரவாஞ் சேரி கமிட்டி சார்பாக ஒன்றியச் செயலாளர் கே. ரவிச்சந்திரன் ஆண்டு சந்தா -3, அரையாண்டு சந்தா-2, தினசரி சந்தா 2-க்கான தொகையை வழங்கினார்.
குடவாசல் (தெற்கு) ஒன்றியச் செயலாளர் கே.கோபிநாத் தீக்கதிர் ஆண்டு சந்தா-4, அரையாண்டுச் சந்தா-2, தினசரி-2-க்கான தொகையை வழங்கினார். குடவாசல் நகரம் சார்பாக நகரக் குழு செயலாளர் டி.ஜி.சேகர் 10 ஆண்டு சந்தா, 12 அரையாண்டு சந்தா மற்றும் தினசரி சந்தா 17-க்கான தொகையை வழங்கினார். வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என். ராதா, ஆண்டு சந்தா-15, அரையாண்டுச் சந்தா-6 மற்றும் தினசரி சந்தா 25-க்கான தொகையை வழங்கினார்.
நீடாமங்கலம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜான்கென்னடி ஆண்டு சந்தா-6, அரை யாண்டுச் சந்தா 4-க்கான தொகையை வழங்கி னார். கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் ஆண்டு சந்தா- 37, அரை யாண்டு சந்தா -59 மற்றும் தினசரி சந்தா 6- க்கான தொகையை வழங்கினார்.
இதில் மொத்தம் 143 ஆண்டு சந்தா, 101 அரையாண்டு சந்தா மற்றும் 81 தினசரி சந்தா என மொத்தம் 325 சந்தாவுக்கான தொகையை, மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வழங்கி னார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தா பெறும் நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், எம்.சேகர், எம்.கலைமணி, வி.எஸ்.கலியபெருமாள், பி. கந்தசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
37 ஆண்டு சந்தா, அரையாண்டு சந்தா-57 மற்றும் 6 தினசரி என சந்தாவுக்கான மொத்த தொகை 1,37,150 ரூபாயை வழங்கி கொர டாச்சேரி ஒன்றியம் அதன் பணியை நிறைவு செய்துள்ளது.