புதுக்கேட்டை, டிச.13 - புதுக்கோட்டை மண்டலம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகை இல்லாமல் முறைகேடாக ரூ.1.08 கோடி நகைக்கடன் வழங்கி மோசடி செய்த செயலாளர், மேற் பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ள னர். இந்நிலையில், தமிழக அரசு 5 சவர னுக்கு குறைவான நகை கடன்களை தள்ளு படி செய்வதாக அறிவித்த நிலையில், பல் வேறு கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பிற மாவட்டத் தைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளா ண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தஞ்சாவூர் மண்டல ஆய்வு குழு அதிகாரி சுப்ர மணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 934 பேருக்கு நகை கடன் வழங்கப்பட்டிருந்ததில், 832 நகை பொட் டலங்களில் மட்டுமே நகை இருந்ததும், 102 பொட்டலங்களில் நகை இல்லாமல் போலி யாக நகைக்கடன் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் இதில், அந்த வங்கியின் செயலா ளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்தி வேல் மற்றும் நகை மதிப்பீட்டாளர் கனகவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து அவர்களது உறவினர்களின் பெயரில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் முறைகே டாக நகை கடன் வழங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வங்கியின் செய லாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்தி வேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் கனகவே லுவை அப்பணியிலிருந்து விடுவிப்பு செய்தும் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மூன்று நபர்க ளிடம் இருந்து இதுவரை 90 லட்ச ரூபாய் வரை யில் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பணத்தை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி வங்கிக்கு பல வருடங்களாக மேலாண்மை இயக்குனராக உள்ள எஸ்.சோமசுந்தரத்திற்கு தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், அவர் மீது விசாரணை நடத்தி துறைரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.