பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் (பொ) மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலை வகித்தார்.