districts

நடன நிகழ்ச்சிக்கு வைப்புத் தொகையை நீக்கி அனுமதி வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 10-

     மேடை நடன நிகழ்ச்சிக்கு வைப்புத் தொகை யை நீக்கி நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரி வித்துள்ளதாவது:

     புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் உள்ளோம். எங்களுக்கு மேடையில் நடனம் ஆடுவதைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. கடந்த  15 ஆண்டுகளுக்கு மேலாக நடன கலைஞர்கள்  பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். டை நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி பெறு வது என்பது மிக கடினமாக உள்ளது.  

    மேடை நடன கலைஞர்கள் கோயில் திரு விழாக்களில் பதிவு செய்யும் நிகழ்ச்சி தொகை யானது ரூ.25,000 முதல் 50,000 வரை உள்ளது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்குவதற்கு வைப்புத் தொகை யாக ரூ.53,531 வசூல் செய்கின்றனர். இத னால், பல இடங்களில் விழா குழுவினர் மேடை  நடன நிகழ்ச்சி நடத்த முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி இருக்கும் எங்களது குடும்பத்தின் நிலை மிகவும் கேள் விக்குறியாகி உள்ளது.

     எனவே, எங்களது வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதற்காக வசூலிக்கப்படும் வைப்புத் தொகையை நீக்க வேண்டும். முறை யாக நடன நிகழ்ச்சி நடத்த காவல் நிலையங்க ளில் நிபந்தனையின் பெயரில் அனுமதி தர வழிவகை செய்ய வேண்டும்.

   இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;