ஆஷா ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி செப்.9இல் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப்.2 - ஆஷா ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி செப்.9 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட பேரவை கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கன்வீனர் செல்வி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை அங்கன்வாடி மாவட்ட நிர்வாகி ராணி வாசித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரையாற்றினார். வேலை செய்யும் இடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிராக செப்.7 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றிப் பெற செய்வது, ஆஷா ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.9 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ராணி, ஜானகி, கலைச்செல்வி, சித்ரா, செல்வராணி, ரேணுகா, மாரியம்மாள், சாந்தி, ஜெயலட்சுமி, கல்யாணி, ஜான்சி, ராணி, பிரமிளா, சித்ரா, மல்லிகா ஆகியோர் மாவட்டக்குழு உறுப்பினர்களாகவும், செல்வி கன்வீனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
நான் மேயராக எல்.ஐ.சி. முக்கியக் காரணம் தஞ்சை மேயர் சண்.இராமநாதன் பெருமிதம்
தஞ்சாவூர், செப்.2- 67 ஆவது எல்.ஐ.சி. உதயதினம் மற்றும் இன்சூரன்ஸ் வார விழாவின் தொடக்க நிகழ்வு தஞ்சை ஜீவன் சோழா கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், நான் மேயராக எல்.ஐ.சி. ஒரு முக்கியக் காரணம் என்று பெருமை யுடன் கூறினார். முன்னதாக நிகழ்வில் பேசிய மேயர், “கடந்த தேர்தலில் நின்று தற்போது நான் மேயராகியுள்ளேன். என்னை மேயராக்கிய தற்கு எல்.ஐ.சி.க்கு முக்கிய பங்கு உண்டு. என் எல்லா பாலிசிகளும் அரசுத் துறையான எல்.ஐ.சி.யில் மட்டுமே உள்ளது. அரசுத் துறைதான் நம் சேமிப்புகளை பாதுகாக்கும். நான் தனியார் நிறுவனங்களில் பாலிசி எடுப்ப தில்லை. இன்னும் சொல்லப் போனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன நிகழ்வு களில்கூட கலந்து கொள்வதில்லை. எங்கள் மாநகராட்சி சார்பாக உள்ள கடை களின் ஏலதாரர்கள் சுமார் 2000 பேருக்கு எல்.ஐ.சி.யின் ஆயுள் காப்பீடு செய்ய மாநக ராட்சி நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி யுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எல்.ஐ.சி. தான் பாதுகாப்பானது” என்றார். நிகழ்விற்கு, தஞ்சை ஜீவன் சோழா கிளை முதன்மை மேலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மேயரோடு, கிளையின் வளர்ச்சி அதிகாரி சீனிவாசன், ஊழியர் ஜகதீஸ்வரி, முகவர் கணேசன் உள்ளிட்டோர் விழாவை தொடக்கி வைத்தனர்.
பெண் குழந்தைகள் விழிப்புணர்வு முகாம்
பொன்னமராவதி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆசிரியர் சத்யா தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட குழந்தை கள் நலக் குழு தலைவர் சதாசிவம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா, தூத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்தி ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் படைவீரர்கள் திறன் பயிற்சி பெறலாம்
திருச்சிராப்பள்ளி, செப்.2 - திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்க ளின் திறனை ஊக்குவித்து அதற்கு ஏற்ப வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், திறன் பயிற்சியை இலவசமாக நடத்திட தமிழக அரசு முன் வந்துள்ளது. எனவே, விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத் துணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயிற்சி கள் பற்றிய விவரம் அறிந்து, செப்.15-க்குள் விண்ணப் பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
மாரத்தான் போட்டியில் தத்தனூர் எம்.ஆர்.கல்லூரி முதலிடம்
அரியலூர், செப்.2- சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது. போட்டியை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். இதில் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரி மாணவ, மாணவியர்கள் முதலிடம் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன், கல்லூரி முதல்வர்கள், பேராசிரி யர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்த னர்.
மாற்றுத்திறனாளி சான்று வழங்கும் சிறப்பு முகாம் தேதி மாற்றம்
கும்பகோணம், செப்.2- தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர்கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாதந்தோறும் 3 ஆவது செவ் வாய்க்கிழமை நடத்தப்படும் முகாம் தேதி மாற்றப் பட்டுள்ளது. செப்.5 அன்று காலை 9.30 மணியளவில் கும்ப கோணம் நால்ரோட்டில் உள்ள ராஜ் மஹாலில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கும் சிறப்பு முகாம் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளால் நடத்தப்பட உள்ளது. இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, UDID கார்டு பெறாதவர்கள், நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் பங்கேற்கலாம். உபகரணங்கள் தேவைப்படுவோர் மனு அளிக்கலாம் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்
அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மணமேல்குடி ஒன்றி யத்திற்குட்பட்ட 30 மையங்களில் தொடங்கப்பட்டது. மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் இத்திட்டம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி வர வேற்றார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத் தப்பட உள்ளது. கற்றல் மையங்களை, பள்ளிகள் சமுதாயக் கூடம், நூறுநாள் வேலை திட்ட பணித்தளம் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அமைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் கற்போர் வசதிக்கேற்ப கற்றல் மையம் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் கற்போருக்கு எழுத்துகளை அடையாளம் காணுதல், எண்களை அடையாளம் காணுதல், எழுத படிக்க வாசிக்க, பெயர் எழுதுதல், குடும்ப உறுப்பி னர்களின் பெயர்கள் எழுதுதல், ஊர் பெயர் எழுதுதல் மற்றும் கையெழுத்திட கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி
சேதுபாவாசத்திரம், செப்.2- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பள்ளத்தூர் கிரா மத்தில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறைப்படி சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி தலைமை வகித்தார். விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் பேசி னார். பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு பள்ளத்தூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுவாக ஏற்படுத்தி, இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தானியங்கள் பயிர் சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை மூலம் பதிவு செய்யும் முறை, 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மண் மற்றும் நீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கக சத்துகள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லி கழிவுகள் இருப்பதை அறிந்து சாகுபடி செய்ய அறி வுறுத்தப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சாந்த ஷீலா, அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
தாராசுரம் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை
கும்பகோணம், செப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் செல்வம் பேசுகையில், கும்பகோணம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட தாராசுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவு நீர் வெளியேறினால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றார். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப் பட்டு, அதற்கு தீர்வு காணப்படும் என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பி னர் சாக்கோட்டை க.அன்பழகன் கூறினார். இக்கூட்டத்தில், கும்பகோ ணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் இரா.லெட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி, சேதுபாவாசத்திரத்தில் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர், செப்.2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செருவாவிடுதி தெற்கு ஊராட்சி கூழானி தெருவில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி நிதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முன்னதாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இடம் வழங்கிய மு.அழகப்பன், அ.செல்வகுமாருக்கு சட்டப்பேரவை உறுப்பி னர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, குறிச்சி ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை சட்டப்பே ரவை உறுப்பினர் நா.அசோக்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத் தார். சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் ஊராட்சி கரிச வயலில், சொக்கநாதபுரம், புக்கரம்பை, செருபாலக்காடு, ஒளிராமன் காடு சாலை ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இதை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார். சொக்கநாதபுரம் ஊராட்சியில், சொக்கநாதபுரம் - புக்கரம்பை ஊராட்சி இணைப்பு சாலை ரூ.62.28 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளதையும் சட்டப்பேரவை உறுப்பினர் துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
அரியலூர், செப்.2 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தலைமை யாசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. உடையார்பானையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(58). இவர் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிய போது, சோழங்குறிச்சி அருகே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி உஷாராணி (51) அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட உடையார்பாளையம் போலீசார், ஆசிரியரை கொலை செய்த ஜெயங்கொண்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்ப ளித்தார். அதில் ஆசிரியர் கொலை வழக்கில் குற்றவாளியான வெங்க டேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து வெங்கடேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செப்.5, 12, 26 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
தஞ்சாவூர், செப்.2 - முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி செப்.5 கும்பகோணம், நாலுரோடு, ராஜ்மகால் மண்டபத்திலும், செப்.12 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக குறைதீர் கூட்ட அரங்கிலும், செப்.26 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலு வலகம் எதிரே, வட்டார சேவை மையத்தி லும் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில், எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் கண் மருத்து வர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை பரிசோ தனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ளலாம். தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திற னாளிகள் இந்த முகாமில் மேற்கூறிய ஆவ ணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப் பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணி: மாநில திருப்பணி வல்லுனர் குழு ஒப்புதல்
மதுரை, செப்.2- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு வீர வசந்த ராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த கும்பாபிஷேக பணி களில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு ரூ.18 கோடி மதிப்பில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான பணிக ளை துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குடமுழுக்கு விழா நடத்துவதற்காக கோவிலின் மற்ற பகுதிக ளிலும் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வேண்டி கோவில் நிர்வாகம் சார்பில் மாநில திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல் வேண்டி விண்ணப்பம் செய்து இருந்த நிலையில் அதற்கான அனுமதியை வல்லுநர் குழு அளித்துள்ளது. குறிப்பாக கோவில் வளாகத்தில் உள்ள 14 பகுதிகளில் முதல் கட்டமாக சுமார் 229 பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், மூத்த பொறியாளர், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் என 13 பேர் அடங்கிய நிபுணர் குழு அனுமதி தெரிவித்துள்ளது. மேலும் திருப்பணிகளை மேற்கொள்வ தற்கு முன்னதாக கோவில் வளாகத்தை ஆவணப்படுத்த திருப்பணி வல்லுனர் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 4 அன்று ராஜகோபுரங்கள் மற்றும் ஐந்து கோபுரங்களுக்கு பாலாலயம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள புதிய கல்யாண மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதி, சித்திரை வீதி, 5 நிலை கோபுரங் கள், ராஜகோபுரங்கள், புது மண்டபங் கள் என 14 பகுதிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுக ளுக்குள் பணிகளை முழுமையாக முடித்து குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் உறுப்பினருக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி கைது
மதுரை, செப்.2- மதுரை மாவட்டம் மேல வடக்கூர் கிரா மத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவ ரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மதுரை மாவட்டம் களி மங்கலம் அருகே உள்ள குன்னத்தூரைச் சேர்ந்த மதுரை மாவட்ட பாஜக விவசாய அணி நிர்வாகியான அழகுமாரி பாண்டி யன்(48) என்பவரோடு கட்சி ரீதியான நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்ணுக்கும், கண வருக்கும் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டை குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்து வைத்த நிலை யில், அந்த பெண் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். ஆனால், பாஜக நிர்வாகி அழகுமாரி பாண்டியன், அந்தப் பெண்ணை கணவ ரோடு சேர்ந்து வாழக்கூடாது என்று கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த தால் அழகுமாரி பாண்டியன் ஆத்திரம டைந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில், சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாஜக நிர்வாகி அழகுமாரி பாண்டியனை கைது செய்தனர்.