districts

img

நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்

தஞ்சாவூர், டிச.15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரத்த நாடு ஒன்றிய 23வது மாநாட்டு தீர்மானங்கள் விளக்க கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒரத்த நாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி ஒன்றியச் செய லாளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.மோகன்தாஸ், விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலா ளர் கு.பாஸ்கர், மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் கே.மலர்கொடி, வாலிபர் சங்க ஒன்றியச்  செயலாளர் செ.பெர்னாட்ஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  “விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்து,

நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி உடன டியாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை, அனைத்து ஊராட்சிகளிலும் துவக்கி முறைகேடின்றி சட்டக்கூலியை வழங்கி, பணித்தள பொறுப்பாளர்களை சுழற்சி முறையில் செயல்படுத்த வேண்டும்.  குடிமனை, குடிமனைப்பட்டா மற்றும்  வீடின்றி தவிக்கும் கூலித் தொழிலாளர்க ளுக்கு அரசு வீடு வழங்கி, கழிப்பறை வசதி அமைத்து கொடுக்க வேண்டும். ஒக்கநாடு கீழையூரிலுள்ள நீரேற்று நிலையத்தில், பழு துகள் நீக்கி செயல்படுத்தி, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்தை பாது காக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வடிகால் வாய்க் கால்கள், ஏரி, குளங்களை தூர்வாரி நீர்ப் பாச னத்தை பாதுகாக்க வேண்டும். வெள்ளூர் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தி குடிமனைகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும்.  தெற்கு நத்தம் கிராமத்தை தனி ஊராட்சி யாக அறிவித்து, அப்பகுதி உழைக்கும் மக்களுக்கு முழுநேர அங்காடி அமைத்து தர வேண்டும். பஞ்சநதிக்கோட்டை, நெய்வாசல், சிவக்கொல்லை, தென்னமநாடு, ஒக்கநாடு, கீழையூர், வள்ளுவர் தெரு ஆகிய ஊராட்சிகளுக்கு சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை, மயானக் கொட்டகை அமைத்து தர  வேண்டும். ஒரத்தநாட்டில் தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைத்து  தர வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. 

உள்ளிருப்பு போராட்டம் 

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வட்டாட்சியரிடம் கொடுப்பதற்காக சென்றனர். மனு கொடுக்க நிர்வாகிகள் வந்த நிலையில், வட்டாட்சியர் அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து வட்டாட்சியர் திட்ட மிட்டு தங்களை புறக்கணிப்பதாக கூறி, சிபிஎம்  நிர்வாகிகள், வட்டாட்சியர் அலுவலகத்திற் குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி னர். இதையடுத்து காவல்துறையினர், சமாதா னப்படுத்தி துணை வட்டாட்சியர் மூலம் மனுவை பெற்றனர்.
 

;