districts

img

தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.4 - தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு  கொடுக்கும் போராட்டம் தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது.  இதில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு, வாழை, மரவள்ளி உள்ளிட்ட இதர பயிர்களுக்கும் போது மான நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்  விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், மீனவர்கள் அனைவர் குடும்பத் திற்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க  வேண்டும்.  கால்நடை இறப்பு, வீடு சேதம்,  மனித உயிரிழப்புகளுக்கு உரிய நிவா ரணங்களை வழங்க வேண்டும். 2020  ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்து,  இதுவரை கிடைக்கப் பெறாத விவ சாயிகளுக்கு, காப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும். அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடியை, தகுதியுள்ள பயனாளிகள் அனை வருக்கும் விடுபடாமல் வழங்க வேண் டும்.  

அனைத்து விவசாயிகளுக்கும் புதிய விவசாயக் கடன்களை உடனடி யாக வழங்க வேண்டும். அடிக்கடி ஏற்ப டும் உரத் தட்டுப்பாட்டை போக்கி செயற்கை விலையேற்றத்தை கட்டுப்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை  தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.ஞான மாணிக்கம் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என். வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே. சௌந்தர்ராஜன், ஒன்றியப் பொருளா ளர் கே.சண்முகம், ஆலக்குடி எஸ்.கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.எஸ்.அசோகன்,  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.அபி மன்னன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.