districts

img

திருஆரூரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 20-

      திருஆரூரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்தக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகளி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      கரும்புக்கு டன் ஒன்றுக்கு  ரூ.5,000 விலை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் கரும்பு பணத்தை கொள்ளை யடித்த திருமண்டக்குடி திரு ஆரூ ரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தி டம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். திரு ஆரூரான் சர்க்  கரை ஆலையில் இயந்திரங் களை திருடி செல்வதை மாவட்ட  நிர்வாகம் தடுக்க வேண்டும். ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் தலைமை வகித்தார். ஆரூரான்  சர்க்கரை ஆலை கரும்பு விவ சாயிகள் சங்கச் செயலாளர் நாக. முருகேசன், பொருளாளர் ரவிச் சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட;ச செயலாளர் என்.வி.கண்ணன் துணைத் தலைவர் கணேசன், கலைமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    எறையூர் சர்க்கரை ஆலை

      பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் அரசு சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் டி.எம். சக்திவேல் தலைமை வகித்தார். முருகானந்தம், இளையராஜா, செல்வராசு, சின்னசாமி கரும்பு  விவசாயிகள் மாநிலச் செயலா ளர் ஏ.கே.ராஜேந்திரன், இந்திய தொழிலாளர் கட்சி ஈஸ்வரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம் கோ.சீனிவாசன், ராஜீவ் கரும்பு விவசாயிகள் சங்கம் வரதராஜன், கனகராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

     ஆர்ப்பாட்டத்தில், 2005 – 2008  ஆம் ஆண்டுகளில் எறையூர் சர்க்கரை ஆலை கரும்பு விவ சாயிகளிடம் இணை மின்திட் டத்திற்காக டன் ஒன்றுக்கு ரூ.50  பிடித்தம் செய்தது. இதன் மூலம்  ரூ.7 கோடியே 95 லட்சம் பிடித்தம்  செய்யப்பட்டது. 13 சதவீத வட்டி யுடன் பிடித்தம் செய்த தொகை யை தமிழக அரசு வழங்க வேண் டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்

     தஞ்சாவூர் தலைமை அஞ்சல கம் முன்பாக ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு கரும்பு விவ சாயிகளின் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பிரிவுத் தலை வர் வி.கந்தவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.நாராயணசாமி, தமிழ்  நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பெட் ரோல், டீசல், சமையல் எண் ணெய், உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்திக்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கரும்பு வெட்டும் கூலி யும் உயர்ந்துள்ளது.  

   ஆனால் கரும்புக்கான கொள்  முதல் விலை மட்டும் உயர வில்லை. டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயி ரம் வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் சர்க்கரை விற்பனையில் உள்ள கோட்டா முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.