districts

img

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம்

புதுக்கோட்டை, ஜன.6-  புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துப்பாக்கி பயிற்சியின் போது குண்டடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி சிபிஎம், மாதர், வாலிபர், சிஐடியு அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவரங்குளம் மேற்கு ஒன்றி யக்குழு சார்பில் ஆலங்குடியில் புத னன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணி யன் மற்றும் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் விளக்கிப் பேசினர். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாதர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சலோமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.அன்பு மணவாளன்,  பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட் டோர் விளக்கிப் பேசினர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே துப்பாக்கி பயிற்சியின் போது குண்டடிபட்டு சிறுவன் இறந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும். ஒன்றிய தொழிலக பாதுகாப்புப் படையின ரால் இச்சம்பவம் நடந்துள்ளதால் ஒன்றிய அரசு சிறுவனின் குடும்பத்தி ற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். பசுமலைப்பட்டி யில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.