districts

img

தேரிழந்தூர் ஆமருவிப் பெருமாள் கோவில் செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.7-

     மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே யுள்ள தேரிழந்தூர் அருள்மிகு ஆமருவிப்பெரு மாள் கோவிலின் செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அராஜகப் போக்கினை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தேரிழந்தூர் ஆமருவிப்பெருமாள் கோவி லைச் சுற்றியுள்ள அக்கோவிலுக்கு சொந்தமான  இடத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலங்காலமாக குடியிருந்து வருகின்றனர். இச்சூழலில், கோவிலின் செயல் அலுவலர் தொடர்ந்து அம்மக்களை மிரட்டி வருகிறார்.

    மேலும், விவசாய நிலங்களில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்  முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு,  கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சான்றினை பெறுவதற்குகூட செயல் அலுவலர் தடையாக இருக்கிறார். வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான சான்று பெற லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக கூறி பாதிக்கப்பட்ட மக்கள் 350-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   புதிய வாடகை நிர்ணயிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் வெளி வரும் வரை உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த பயனாளிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசாணை 318-ஐ செயல்படுத்திட உட னடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல தலைமுறைகளாக அடிமனை களில் வீடுகள், சிறுகடைகள் கட்டி பயன்படுத்தி வருபவர்களை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்ற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.  

    காலம் காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயி களை “மறு ஏலம்” என்ற பெயரில் நிலத்தை விட்டு  வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.  குத்தகை விவசாயிகளுக்கு ஆர்டிஆர் பதிவு  செய்து தர வேண்டும். அறநிலைய சட்டப்பிரிவு  34ன்படி பல தலைமுறைகளாக குடியிருப்ப வர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்தந்த இடங்களுக்குரிய நியாயமான விலை யை தீர்மானித்து அவர்களுக்கு சொந்தமாக்கிட வேண்டும்.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் சிறு, குறு, கடை வைத்து வணிகம் செய்து வரும் பயனாளிகளுக்கான வாடகை நிர்ண யத்தை, சந்தை மதிப்பீட்டின்படி தீர்மானிக்கா மல், அவர்களின் வணிக நிலைமைகளை கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது.

    அக்கோவிலின் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்  தலைவர் த.ராயர் தலைமை வகித்தார். மாநில  பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட செய லாளர் ஏ.ஆர்.விஜய், மாவட்ட பொருளாளர் அ.இராமலிங்கம் (இயற்கை விவசாயி), மாவட்டத் துணை செயலாளர் சி.மேகநாதன், மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

    பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை தற்  காலிகமாக கைவிட்டனர்.