districts

img

கொளப்பாடு ஊராட்சி நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 7-

     கொளப்பாடு ஊராட்சி யின் நிர்வாகச் சீர்கேட்டினை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகளை உட னடியாக சீர்செய்திட வேண் டும். புதிய சாலைகள் அமைக்க வேண்டும். பழைய காலனி வீடுகளை இடித்துவிட்டு, புதிய கான் கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் மற்றும் ஊராட்சி யின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எல்.தமிழ்மாறன் தலைமையில் கொளப்பாடு கடைத்தெரு வில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அ. ராஜா, ஒன்றியக் குழு உறுப் பினர்கள், கிளை செயலா ளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.