பாபநாசம், ஆக. 22- அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கத்தின் முதல் குடும்ப விழா சந்திப்பு தஞ்சாவூர் ஏஓ ஸ்போர்ட்ஸ் அண்ட் பேமிலி கிளப்பில் நடைபெற்றது. விழாவிற்கு டெல்டா ரோட்டரிச் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஆடிட்டர் ஜெயக் குமார், அவரது துணைவியார் ரொட்டேரியன் சுகன்யா கலந்து கொண்டனர். அய்யம்பேட்டை ரோட்டரிச் சங்கத் தின் சாசன உறுப்பினர் பஷீர் முகமது முன்னிலை வகித்தார். முன்னதாக செயலாளர் முத்துக்குமரன் வர வேற்றார். இதில் குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல், ஆண்களுக்கு த்ரோபால், பெண்களுக்கு பன் கேம்ஸ் நடைபெற்றது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. கலந்து கொண்ட அனைத்து குடும்பத்தி னருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.