பெரம்பலூர், ஆக.21 -
புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான சுர்ஜித் பவன் அரங்கிற்குள் நடைபெற்ற கூட்டத் திற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி காவல்துறை அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்துள்ளது. இதைக் கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் மற்றும் ஒன்றிய செயலாளர் எம்.கருணாநிதி, நகரச் செயலாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.