districts

குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

திருவாரூர், ஜூலை 23 -

    குடவாசல் பேரூராட்சி செயல் அலு வலர் யசோதாவை பணியிடை நீக்கம் செய்ய  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

     திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூ ராட்சி செயல் அலுவலராக முத்துப்பேட்டை (பொ) யசோதா செயல்பட்டு வந்தார். இவர்  பொறுப்பேற்றதிலிருந்து குடவாசல் பேரூ ராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந் தது மட்டுமின்றி, நிர்வாக ரீதியாக எந்த செயல்பாடுகளும் இல்லை. இதனால் மக்கள்  பெரும் அவதிக்குள்ளாயினர்.

     இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றியம் சார்பாக பேரூராட்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், ‘பேரூராட்சியில் உள்ள நிர்வாக குறை பாடுகளை நீக்கி உரிய முறையில் மக்கள் பணிகள் நடைபெறும்’ என துறைசார்ந்த அலு வலர்கள் உறுதியளித்தனர்.

    மேலும் குடவாசல் பேரூராட்சி நிர்வாக சீர்கேடுகளை விளக்கி சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலை மணி, குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    ஆனாலும், குடவாசல் பேரூராட்சியில் நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தன. இது குறித்து மாவட்ட ஆட்சியர், செயல்அலுவ லர் யசோதாவிடம் விளக்கம் கேட்ட போது,  அவர் முறையாக விளக்கம் அளிக்காததால், செயல் அலுவலர் யாசோதாவை, ஆட்சியர் சாருஸ்ரீ பணியிடை நீக்கம் செய்தார்.