districts

img

சேதினிபுரம் ஊராட்சி மன்றத்தின் சீர்கேடுகளை கண்டித்து சிபிஎம் மறியல்

குடவாசல், டிச.8 -  குடவாசல் ஒன்றியம் சேதினிபுரம் ஊராட்சி மன்ற சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சேதினிபுரம் பெட்ரோல் பங்க் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  சேதினிபுரம் ஊராட்சிக் குட்பட்ட கூரை வீடுகள், பழுத டைந்த தொகுப்பு வீடுகள், அனைத்து (பிஎம்ஏஒய்) அவாஸ் வீடுகளை உடனடி யாக கட்டித் தர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் காலனி வீடுகளை பலமுறை எடுத்துக் கூறியும் பழுது நீக்கம் செய்யவில்லை. உடனே பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்.  சேதினிபுரம் கீழத்தெரு தட்டி பாலத்தை சிமெண்டு பாலமாக அமைத்து தர வேண்டும். சேதினிபுரம் ஆற்றங்கரை சாலை, கீழத்தெரு சாலை மற்றும் மயான சாலையை புதிய தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் கிளைச் செய லாளர் எம்.அந்தோணிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய  குழு உறுப்பினர் கா.பகத் சிங் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி ஆர். லெட்சுமி கண்டன உரையாற் றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை உறுப் பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

;