திருவாரூர், ஜுன் 23 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள காட்டூர்-நாவேளி சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரடாச்சேரி ஒன்றி யம் சார்பாக கடந்த மாதம் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமையில், ஒன்றியச் செயலாளர் டி. ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ்.செந்தில் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூர்-நாவேளி தியாகராஜா ஆசிரியர் பயிற்சி நிலையம் செல்லும் சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, கப்பி சாலையாக உள்ளது. இதில் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் மோசமான நிலை யில் உள்ளது. உரிய முறையில் இச்சாலையை ஆய்வு செய்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் அலுவலர்களிடம் வலியுறுத்தினர். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஒரு மாதத்தில் முழுமையாக ஆய்வு செய்து தரமான முறையில் திகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து சாலை மறியல் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது காட்டூர்-நாவேளி சாலையை முழுமையாக சீரமைக்க 88 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி யால், இந்தப் பகுதிக்கு சாலை வசதி கிடைக்க உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிபிஎம்-க்கும், சாலை அமைக்க நிதி ஒதுக்கிய அரசுக் கும் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கூறுகையில், கட்சியின் கோரிக் கையை ஏற்று, சாலையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பயன் படுத்தி மக்களுக்கு தரமான சாலை அமைத்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.