திருச்சிராப்பள்ளி, அக்.28 - திருச்சி மாவட்டம் மணப் பாறை வட்டம் கே.புதுக் கோட்டை கிராமம், கரையாம் பட்டியைச் சேர்ந்த சன்னப்ப ரெட்டி மீது கடந்த 25.8. 2023 அன்று கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய நபர் களுக்கு ஆதரவாக வழக்கை வாபஸ் வாங்க கட்டாயப் படுத்தியதோடு, பாதிக்கப் பட்டவர் மற்றும் சம்பவ இடத் தில் இல்லாத நபர் மீதும் வழக்கு பதிவு செய்த வையம் பட்டி காவல் ஆய்வாளரை கண்டித்தும், குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல் படும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வையம் பட்டி ஒன்றியக் குழு சார்பில் வெள்ளியன்று வையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெள் ளைச்சாமி தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிதம்பரம், சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், வேல் முருகன், கிளைச் செயலா ளர் தேவராஜ், கிளை தலை வர் பி.முருகன் ஆகியோர் பேசினர். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜு நன்றி கூறினார்.