மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்டக்குழு உறுப்பினர் காதர் ஹூசைன் பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளீதரன், அய்யம்பேட்டை நகர் செயலாளர் சேக் அலாவுதீன், இளங்கோவன், முருகேசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். கண்டன உரையாற்றினர்.