தஞ்சாவூர், ஏப்.16- கலாச்சாரம், பண்பாடு, அரசியல் தளத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை புகுத்தும் வகையிலும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், தஞ்சை ஒன்றியம் பிள்ளை யார்பட்டியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சை ஒன்றிய செயலாளர் கே.அபி மன்னன் தலைமை வகித்தார். தங்க. சண்முகவேலு முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னதுரை கண்டன உரையாற்றினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பி னர் பி.எம். இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி நிதி இந்தப் பொதுக்கூட்டத்தில் தஞ்சை ஒன்றியம் சார்பில் கட்சி நிதியாக ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்தை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் கட்சி தலைவர்களிடம் வழங்கினார்.