districts

img

மழையால் சுகாதார சீர்கேடு: மாநகராட்சி ஆணையரிடம் சிபிஎம் புகார் மனு

திருச்சிராப்பள்ளி, டிச. 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி  கோ.அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலு சாமி புதனன்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மானை சந்தித்து ஒரு புகார் மனு  அளித்தார்.  அதில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38, 39, 40, 41, 42-வது வார்டு பகுதிகளில் கனமழை யால் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து சுகாதார  சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று வியாதிகள் பரவ வாய்ப்பு உள்ளதாக மக்கள்  அச்சம் அடைந்துள்ளனர். சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனே சீர் செய்திட வேண்டும். அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும். மேலும்  கொசு மருந்து அடித்து நோய் வராமல் பாது காக்க வேண்டும். தற்போது மழை நின்ற பின்ன ரும் எடமலைப்பட்டிபுதூர் மதுரை மெயின் ரோடு பகுதியில் சாக்கடை உடைந்து கழிவுநீர்  நிரம்பி ஆறாக ஓடுகிறது. இதனை தடுக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கிராப்பட்டி, புதூர் இணைப்பு சாலை, அன்புநகர் ரயில் சுரங்கப் பாதையில் உள்ள மழைநீரை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும். ஜீயபுரத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க  வேண்டும். பசுமை பூங்காவை பராமரிப்பு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கை கள் மனுவில் கூறப்பட்டுள்ளன. மனு அளித்தபோது கிளை செயலா ளர்கள், மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க  மாநில துணைத் தலைவர் பஷீர் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

;