districts

நாகப்பட்டினத்தில் சிபிஎம் பேரவை

நாகப்பட்டினம், ஜூன் 6-

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப்பட்டி னம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சிறப்புப் பேரவை  நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின் பாபு  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து  உறுப்பினர் அட்டைகளை வழங்கிப் பேசினார்.

     நாகப்பட்டினம் நகர்குழு சார்பில் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற பேரவைக்கு நகர் செயலாளர் க. வெங்கடேசன் தலைமை வகித்தார்.  மாநிலக் குழு உறுப்பி னரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி உறுப்பினர் அட்டை வழங்கிப் பேசினார். பேரவையில் பங்கேற்ற தோழர் ஜி.ராஜேஸ்வரி கட்சி வளர்ச்சி நிதியாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினார்.  

    கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் திருப்பூண்டியில் நடைபெற்ற பேரவைக்கு ஒன்றியச் செயலாளர் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன் உறுப்பினர் அட்டை களை வழங்கிப் பேசினார்.