districts

img

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

தஞ்சாவூர், டிச. 10 - நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதை  காட்டேரியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதி களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் லயன்ஸ் சங்கம், கோகோனட் சிட்டி இன்ஸ்ப யர் லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், வர்த்தக  சங்கம், அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை மாலை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.  இந்திய அரசின் முப்படைகளின் தலை மைத் தளபதி பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் குன்னூரில் நிகழ்ந்த ஹெலி காப்டர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட  அமைதி ஊர்வலம் பேராவூரணி சட்டமன்ற  உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை யில் நடைபெற்றது.

பயணியர் மாளிகையில் தொடங்கி, சேது சாலை, முதன்மைச் சாலை வழியாக பேருந்து  நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு தலைமைத்தளபதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எம்.கனக ராஜ், இ.வீ.காந்தி, எச்.சம்சுதீன், கோக னட்சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் வ.பாலசுப்பி ரமணியன், லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.சி.சி.  ராஜா மற்றும் ரோட்டரி, வர்த்தக சங்க நிர்வாகி கள் இரங்கல் உரையாற்றினர்.  அரசுப் பள்ளியில் மலரஞ்சலி  பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில், தேசிய மாணவர் படை  சார்பில் கே.பிபின் ராவத் மற்றும் வீரர்களுக்கு  பள்ளி தலைமையாசிரியர் கே.சோழபாண்டி யன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத் தப்பட்டது.  பாபநாசம் குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ  வீரர்கள் மறைவிற்கு, திமுக, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பாபநாசம் அண்ணா சிலை அருகில் அவரது படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி  அஞ்சலி செலுத்தினர். இதே போன்று ரோட்டரி  சங்கம், லயன்ஸ் சங்கம் சார்பில் மவுன ஊர்வ லம் நடைபெற்றது. பாபநாசம் அண்ணா சிலை  அருகில் தொடங்கிய ஊர்வலம் பிரதான சாலை வழியாகச் சென்று உழவர் சந்தை அருகில் முடிவடைந்தது. பின்னர் பிபின் ராவத் படத்திற்கு மாலையணிவித்து மவுன அஞ்சலி  செலுத்தப்பட்டது. பாபநாசம் பெனிபிட் பண்ட் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

எம்எல்ஏ ஜவாஹிருல்லா இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட  ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப் டர் குன்னூர் மலைப் பகுதியில் விபத்துக்குள் ளானதில் 13 பேர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.  

ராணுவத்தின் பல்வேறு பொறுப்புகளை செவ்வனே செய்து 2016 ஆம் ஆண்டில் தலை மைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் பிபின் ராவத். 2019 டிசம்பரில் முப்படைகளின் முதலா வது தலைமை தளபதியாக பதவி ஏற்றவர். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்பாய் செயலாற்றியவர் பிபின் ராவத்.  அவரும், அவரது மனைவியும், முக்கிய ராணுவ அதிகாரிகளும் இந்த விபத்தில் உயிரி ழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.  நாட்டிற்காக கடுமையாக உழைத்த இந்த உயர் அதிகாரிகளின் தியாகம் அளவிட முடியா தது. வீரமிக்க இந்த செம்மல்களின் குடும்பத்தா ருக்கும் முப்படையினருக்கும் மனிதநேய  மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதா பங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் உருவப்படத்திற்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கைவினைஞர்கள் அஞ்சலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விஸ்வகர்ம  கைவினைஞர்கள் சங்கத்தினர், ஹெலி காப்டர் விபத்தில் மறைந்த இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கும், உடன்  பயணித்த ராணுவ தளபதிகள் மற்றும் வீரர்க ளுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் விஸ்வகர்ம கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை கொள்கை பரப்புச் செய லாளர் ஆறுமுகம், அரியலூர் மாவட்ட தலைவர்  தில்லைநாயகம், மாநில பிரதிநிதி மாரிமுத்து உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.