districts

மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுவதில்லை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 15 - திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் திருவாரூர் நகராட்சி துப்புரவு  ஊழியர்கள் மற்றும் சென்னை சார்ந்த ஒரு நிறு வனத்தின் ஒப்பந்த அடிப்படையில், தொழி லாளர்களை அமர்த்தி பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.  ஒப்பந்த நிறுவனத்தில் இருந்து,  மாதந்தோறும் தூய்மைப் பணியாளர் களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து  நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப்  பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகராட்சியில் நிரந்தர துப்புரவு ஊழியர்கள் 50 பேரும், ஒப்பந்த ஊழி யர்கள் 120 பேரும் தூய்மைப் பணியில் ஈடு பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும்  5 ஆம் தேதிக்குள் ஒப்பந்தக்காரர்களால் ஊதி யம் வழங்க வேண்டும். கடந்த போராட்டத் தில் இது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் ஊதியம் உறுதியளித்தபடி வழங்க வில்லை. தற்போது ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் இன்று போடு கிறோம்; நாளை சம்பளம் போடுகிறோம் என  தொடர்ந்து கூறி மாதக் கடைசியில் கொடுக்கும்  நிலை உள்ளது. மேலும் ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பி.எஃப், இஎஸ்ஐ கணக்குகள்  சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. நக ராட்சி நிர்வாகமும் இதைப்பற்றி கண்டு கொள் வதில்லை.  இதனை கண்டித்து தூய்மை பணியா ளர்கள், நகராட்சி ஊழியர் சங்கத்தின் தலை வர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வைத்திய நாதன் கோரிக்கையை வலியுறுத்தி உரை யாற்றினார். இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் புதன்கிழமை மாலைக்குள் சம்பளம் போடுவ தாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டம்  தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

;