districts

img

கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்; மக்கள் அவதி கரூர், மே 19 - மண் சாலையை தார்ச் சாலை யாக அமைக்கும் பணி ஐந்து மாத மாக கிடப்பில் போடப்பட்டுள்ள தால், பொதுமக்கள் அவதி யடைந்துள்ளனர். புதிய தார்ச் சாலை அமைக் காமல் அலட்சியமாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மண் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊர் பொது மக்கள் கூறுகையில், “கரூர் மாவட் டம், தாந்தோணி ஒன்றியம், மூக்க ணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வால்காட்டுப்புதூர் முதல் நத்த மேடு செல்லும் சாலையில் புதிதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. மேலும்  இப்பகுதியில் உள்ள பொது மக்கள் டெக்ஸ்டைல், கட்டுமானம்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் கரூர் நகரங்களுக்கு தினந் தோறும் சென்று வருகின்றனர்.

 வால்காட்டுப்புதூர் முதல் நத்த மேடு வரை செல்லும் குண்டும், குழியுமாக உள்ள மண் சாலையை தார்ச் சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பொதுமக்களின் கோ ரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தங்களது பங்குத்  தொகையாக ரூ.11 லட்சத்து 25 ஆயி ரத்தை மூக்கணாங்குறிச்சி ஊராட்சி வார்டு உறுப்பினர் முருகே சன் தலைமையில் வசூல் செய்து கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு 13.12.2023 அன்று டிடி எடுத்து அனுப்பி உள்ளனர்.  இதனைத் தொடர்ந்து கடந்த  ஐந்து மாதங்களுக்கு முன்பு,  புதிய தார்ச் சாலை அமைப்பதற் காக  மண் சாலை அமைத்தனர். மண்  சாலையை அமைத்து ஐந்து மாதம்  ஆகியும் புதிய தார்ச்சாலை அமைக்காமல் அப்பணியை கிடப்பில் போட்டுள்ளனர்.   மண் சாலை அமைத்து ஐந்து மாதம் ஆனதால், தற்போது இந்த  சாலை குண்டு, குழியுமாக மாறி யிருக்கிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள், குழி கள் இருப்பது தெரியாமல்  கீழே விழுந்து விபத்துக்குள்ளா கின்றனர். பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான தார்ச்சாலை  அமைக்கும் பணியை உடனடியாக  நிறைவேற்றி கொடுக்க சம்பந்தப் பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றனர். கரூர் மாவட்ட நிர்வாகம் மெத்தனம்  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக் குழு உறுப்பினர் எஸ்.ராமகிருஷ் ணன் கூறுகையில், “வால்காட்டுப் புதூர் - நத்தமேடு சாலையில் குடி யிருக்கும் பொது மக்கள் அடிப்படை  வசதிகள் எதுவும் இன்றி மிகவும்  சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார் கள்.‌ தார்ச்சாலை அமைக்க ஐந்து மாதங்களுக்கு முன்பு பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த பணியை கிடப்பில் போட்டு விட்ட னர். தெரு விளக்குகள் இல்லை. இதனால் வேலைக்கு சென்று திரும்பும் மக்கள், குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களில் மிகப்பெரிய அச்சத்துடனே தின மும் சென்று வருகிறார்கள்.

இரவு  நேரங்களில் சாலை எது என்றே தெரியாமல் உள்ளது.  தற்போது கரூர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை  பெய்து வருகிறது. இனி வரும் காலமும் மழைக்காலமாக இருக் கிறது. இதனால் மண் சாலையில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடு கிறது. ஆங்காங்கே குழிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் எது குழி, எது ரோடு என தெரியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர  வாகனங்கள் சகதியில் சிக்கி கீழே விழுகின்றன. தினமும் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. பொது மக்களின் நலன் கருதியும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் உடனடியாக தார்ச் சாலை அமைக்க  தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மக்கள் பிரதிநிதியான தாந் தோணி ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர் வேலுச்சாமி மற்றும் தாந்தோணி  பிடிஓ ஆகியோர் பொதுமக்கள் கோரிக்கையான புதிய தார்ச் சாலை போடுவதற்கு எந்தவித முயற் சியும் எடுக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப் பினாலும் பதில் சொல்ல மறுக் கின்றனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  பொதுமக்கள் தங்களது பங்கு  தொகையை அரசுக்கு செலுத்தி யும் கரூர் மாவட்ட நிர்வாகம் கடந்த  5 மாதமாக இந்த தார்ச்சாலை பணி களை செயல்படுத்துவதற்கு தயா ராக இல்லை.  இதில் அலட்சியமாக  செயல்படும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, இப்பகுதி மக்களை திரட்டி சேறும்,  சகதியுமாக உள்ள இந்த மண்  சாலையில் நாற்று நடும் போராட் டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் நடத்தப்படும்” என்றார்.

;