districts

img

மூத்த எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் காலமானார்

திருநெல்வேலி, டிச. 22- நெல்லையில் மூத்த எழுத்தாளர் வாத்தி யார் ஆர்.எஸ்.  ஜேக்கப் ( வயது 96 ) செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு உடல்  நலக்குறைவால் காலமானார். நெல்லை சதி வழக்கில் சிறைப்பட்ட 93 பேரில் இவரும் ஒருவர். இப்போது வரை  இந்த சதி வழக்கில் உயிரோடு இருந்த 2 பேர் ஆர்.நல்லகண்ணு மற்றும் அவரின் நண்ப ரான தற்போது உயிரிழந்த ஆர். எஸ். ஜேக்கப் ஆகியோர். எழுத்தாளரான இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு கதைகள் எழுதியவர் ,போராடியவர். திரு நெல்வேலி சதி வழக்கில் கைதானவர். வாத்தி யார் என்ற இவரது நாவல் மிகப்பிரபலமானது. அதனாலேயே வாத்தியார் ஜேக்கப் என்று அழைக்கப்பட்டார் .இவரது தொழிலும் ஆசிரியர் என்பதால் பெயர்க்காரணமும் அப்படியே அமைந்து விட்டது.  இந்நிலையில் அவரது மறைவை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் வீ.பழனி, மாவட்டக்குழு உறுப்பி னர் கு.பழனி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்க நாறும்பூநாதன், மற்றும்  வரகுணன் ,வெங்கடாசலம், ரவி சண்முகம் உட்பட ஏராளமானோர்  அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினர்,  மறைந்த வாத்தியார் ஜேக்கப்  குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

;