தஞ்சாவூர், பிப்.23 - தில்லியில் போராடி வரும் விவசாயி கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இளம் விவசாயி சுப்கரன்சிங் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித் தும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயி கள் படுகாயம் அடைந்த நிலையில், விவ சாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலை யம் அருகே, கருப்புக் கொடியுடன் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கி ணைப்பு குழுவினர் முன்னிலை வகித்த னர். அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் முத்து.உத்திராபதி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு, மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்செல்வி மற்றும் விவசாயிகள் பலர் கண்டன உரை யாற்றினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, புதுக் கோட்டை மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேர ணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித் திருந்தனர். காவல்துறையால் அனுமதி மறுக்கப் பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்திற்கு வந்த டிராக்டர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப் பட்டன. போலீசாரிரன் தடையை மீறி திட்ட மிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவசாயி கள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் மு.மாதவன், இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ். தனபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணைச் செயலாளர் என்.தமி ழரசன் மற்றும் விவசாய சங்கப் பிரதி நிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப் பட்டினம் மாவட்டம் சாட்டியகுடி, கீழ்வே ளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதா ரண்யம், கரியாப்பட்டினம், திருமருகல் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன் உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ், நாகை தெற்கு ஒன்றியச் செயலா ளர் ஏ.வடிவேல், விவசாயிகள் சங்க நாகை ஒன்றியச் செயலாளர் ஏ.கே. குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.