மயிலாடுதுறை, செப்.4 - நாடு முழுவதும் நிகழும் தலித்து கள் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பட்டி னம் காவல் நிலையத்தில் தலித்துகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோவன் தலைமையில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் ஏ.ஆர்.விஜய், நேதாஜி, சுந்தரலிங்கம், கோவி.ஆசை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றி னார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் பழ. வாஞ்சிநாதன், மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரை யாற்றினர்.