districts

img

திருச்சியில் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு

திருச்சிராப்பள்ளி, டிச.26 - விடுதலை போராட்ட வீரரும் தகைசால் தமிழருமான தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு திருச்சி  வெண்மணி இல்லத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ் தலைமை வகித்தார். மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தோழர் சங்கரய்யா உருவப்படத்தை திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, இடைக்குழு மற்றும் கட்சி உறுப்பினர்கள் தோழர் சங்கரய்யா உருவப்படத்திற்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர். மாவட்டக் குழு உறுப்பினர் நஸ்ரின் பானு நன்றி கூறினார்.