districts

தோழர் இலக்குமணன் காலமானார்

திருவாரூர், ஜூலை 5-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியக்  குழு உறுப்பினரும், மூத்த தோழருமான ஆர்.இலக்கு மணன் உடல்நலக் குறைவால் செவ்வாயன்று இரவு கால மானார். அவருக்கு வயது 84.

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், முசிறி யம், திட்டாணி முட்டத்தில் உள்ள ஆலத்தாங்குடியில் வசித்து வந்த தோழர் இலக்குமணன், கட்சியின் கொரடாச்சேரி ஒன்றிய  குழு உறுப்பினராக பணியாற்றியவர்.

   அவரது மறைவு செய்தி அறிந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.முருகை யன், எம்.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, கொரடாச்சேரி ஒன்றியச் செய லாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனி வாசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தி னர்.