districts

தோழர் கலியமூர்த்தி காலமானார்

திருவாரூர், ஜூலை 24 -

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அட வங்குடி, ஜவஹர் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் எம்.கலியமூர்த்தி (60) திங்கள்கிழமை காலமானார்.

   இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்  வாய்க்கிழமை திருவாரூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த நோட்டீசை, ஒன்றியக் குழு உறுப்பி னர் சி.லோகநாதனுடன் இணைந்து வழங்கிக் கொண்டி ருந்தார். அப்போது தோழர் கலியமூர்த்திக்கு திடீரென மார டைப்பு ஏற்பட்டதில் அவர் காலமானார்.

    அவரது மறைவு செய்தியறிந்த மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கலியமூர்த்தியின் உடலுக்கு மலர்மாலை  வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன், எப்.கெரக்கோரியா, ஒன்றிய குழு உறுப்பினர் சி.லோகநாதன் மற்றும் விவ சாயம் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.கிருஷ்வநாதன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடை பெறும்.