districts

img

தோழர் துரைராஜ் - ராஜேஸ்வரி இல்லத் திருமண விழா

சிபிஎம் ஆலத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சின்னசாமி-விஜயலட்சுமி பெரம்பலூர் துரைராஜ் - ராஜேஸ்வரி இல்லத் திருமண விழா செப்டம்பர் 9 அன்று சமயபுரம் அருள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில், சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை அனைவரையும் வரவேற்றார். கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற்குழு சந்திரன், மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், சமயபுரம் பேரூராட்சி 5-ஆவது வார்டு உறுப்பினர் சாந்திபாலகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் கனகராஜ் மற்றும் பெரம்பலூர் நிர்வாகிகள் ஏ.கே.ராஜேந்திரன், எஸ்.பி.டி.ராஜாங்கம், ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன், ரெ.இராஜகுமாரன், சி.செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;