districts

ஆதர்ஷ் சொசைட்டியில் முறைகேடு முதிர்வுத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியரிடம் புகார்

தஞ்சாவூர், டிச. 7 -  ஆதர்ஷ் கிரெடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டியில், முதலீட்டாளர்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடி  அளவில் முதிர்வு தொகையை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் ஆட்சி யரிடம் புகார் அளித்தனர். ஆதர்ஷ் கிரெடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி நிறுவ னத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், வழிகாட்டி  ஆலோசகர்கள் ஆகியோர் திங்கள்கிழமை தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத் தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  ஆதர்ஷ் கிரெடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி நாடு முழுவதும் 806 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரு கிறது. தமிழகத்தில் மட்டும் 27 கிளைகள் துவங்கப் பட்டு 450 ஊழியர்கள், ஆலோசகர்கள் பணியாற்றினர். இந்த சொசைட்டியில் மாதாந்திர சேமிப்பு, தினசரி சேமிப்பு, கூட்டு வட்டி வழங்கும் வைப்புத்தொகை, மாதாந் திர வருமான வைப்பு தொகை, பங்குத்தொகை, முத லீடு, சேமிப்பு கணக்கு போன்ற அம்சங்களை கொண்டு  செயல்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வரை முதலீடு செய்த  தொகைக்கான முதிர்வுத் தொகையானது முதலீட்டா ளர்களுக்கு சரியான முறையில் வழங்கப்பட்டது. இந்த சொசைட்டியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர்  மாதத்திற்குப் பிறகு பல்வேறு முறையீடு காரணமாக எந்த வித காரணமுமின்றி சொசைட்டி கலைக்கப்பட்டது.  இதனால் கடந்த 2 ஆண்டாக முதிர்வு தொகை  மற்றும் மாதாந்திர வருமான வட்டி, பங்கு ஈவு தொகை  ஆகியவை இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. நாடு  முழுவதும் 21 லட்சம் வைப்புதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். மேலும் 4 லட்சம் ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 400 கோடி ரூபாய், நாடு  முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்க ளுக்கு பணம் கிடைக்க வேண்டியுள்ளது. தஞ்சாவூரில் மட்டும் 15 ஆயிரம் கோடியும், கும்பகோணத்தில் ஆறு கோடி ரூபாயும் கிடைக்க வேண்டியுள்ளது.  இதில் நூறு முதல் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என  வருமானத்திற்கு ஏற்ப பலரும் முதலீடு செய்துள்ளனர். எனவே அரசு தனி கவனம் செலுத்தி முதலீட்டாளர்கள், ஆலோசகர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை யினை பெற்றுத் தர வேண்டும்.”  இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.